குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 171

மருதம் - தலைவி கூற்று


மருதம் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்த காலத்தில் அயலார் வரையப் புக்கனராக, அதுகண்டு கவன்ற தோழிக்கு, “இவர்கள் செய்யும் முயற்சி பயன்படாதொழியும்” எனத் தலைவி கூறியது.

காண் இனி வாழி - தோழி - யாணர்க்
கடும்புனல் அடைகரை நெடுங் கயத்து இட்ட
மீன் வலை மாப் பட்டா அங்கு,
இது மற்று - எவனோ, நொதுமலர் தலையே?
- பூங்கணுத்திரையார்.

பொருளுரை:

தோழி! இப்பொழுது பார்ப்பாயாக; புதுவருவாயாகிய மிக்க புனலையும் அடைந்த கரையையுமுடைய ஆழமான குளத்தின்கண் அமைத்த மீனுக்குரிய வலையின்கண் விலங்கு அகப்பட்டாற் போல அயலாரிடத்து வரைவுக்குரிய இம் முயற்சி என்ன பயனுடைத்து?

முடிபு:

தோழி, காண்; நொது மலர்தலை இது எவன்?

கருத்து:

அயலார் வரைவுமேற்கொள்வதனாற் பயனொன்று மில்லை.