குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 225
குறிஞ்சி - தோழி கூற்று
குறிஞ்சி - தோழி கூற்று
பாடல் பின்னணி:
வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரியும் தலைவனை நோக்கி, “இதுகாறும் நின் விருப்பப்படியே ஒழுகி வந்த யாம் செய்த நன்றியை மறவாது, எம் விருப்பத்திற்கு இணங்க விரைவில் வரைந்து கொள்வாயாக” என்று தோழி கூறியது.
கன்று தன் பய முலை மாந்த, முன்றில்
தினை பிடி உண்ணும் பெருங் கல் நாட!
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல,
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க் . . . . [05]
கலி மயிற் கலாவத்தன்ன இவள்
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே.
தினை பிடி உண்ணும் பெருங் கல் நாட!
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல,
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க் . . . . [05]
கலி மயிற் கலாவத்தன்ன இவள்
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே.
- கபிலர்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
கன்றுதன் பயமுலை மாந்த முன்றில்
தினைபிடி உண்ணும் பெருங்கல் நாட
கெட்டிடத் துவந்த உதவி கட்டில்
வீறுபெற்று மறந்த மன்னன் போல
நன்றிமறந் தமையா யாயின் மென்சீர்க் . . . . [05]
கலிமயிற் கலாவத் தன்ன இவள்
ஒலிமென் கூந்தல் உரியவா நினக்கே.
தினைபிடி உண்ணும் பெருங்கல் நாட
கெட்டிடத் துவந்த உதவி கட்டில்
வீறுபெற்று மறந்த மன்னன் போல
நன்றிமறந் தமையா யாயின் மென்சீர்க் . . . . [05]
கலிமயிற் கலாவத் தன்ன இவள்
ஒலிமென் கூந்தல் உரியவா நினக்கே.
பொருளுரை:
யானைக்கன்று தனது பாலுள்ள முலை குடித்து நிற்ப வீட்டின் முன்னிடத்துள்ள தினைப் பயிரை பெண் யானை உண்ணுதற்கு இடமாகிய பெரிய மலைகளை உடைய நாடனே தான் வறுமையுற்ற காலத்துப் பிறரால்பெற்று மகிழ்ந்த உதவியை அரசுகட்டில ாகிய சிறப்பைப் பெற்று மறந்து விட்ட அரசனைப் போல நீ யாம் செய்த நன்றியை மறந்து பொருந்தாயாகி அதனை நினைந்து வரைந்து கொள்வாயாயின் இத்தலைவியினுடைய மெல்லிய சிறப்பை உடைய ஆரவாரிக்கும் மயிலினது பீலியைப் போன்ற தழைத்த மெல்லிய கூந்தல் பகுதிகள் நினக்கேஉரிமை உடையனவாகும்.
முடிபு:
நாட, நன்றி மறந்து அமையாயாயின், இவள் கூந்தல் நினக்கே உரியவாம்.
கருத்து:
நீ யாம் புரிந்த நன்றியை மறவாது விரைவில் வரைந்து கொள்ள வேண்டும்.