குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 233

முல்லை - தலைவன் கூற்று


முல்லை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தலைவியை மணந்து கொள்ளாமல் வினைமேல் பிரிந்து சென்ற தலைவன் மீண்டு வருகையில் பாகனுக்குத் தலைவியினது ஊரைக்காட்டியது.h2>

கவலை கெண்டிய கல்வாய்ச் சிறு குழி
கொன்றை ஒள் வீ தாஅய், செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன
கார் எதிர் புறவினதுவே - உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில், யாவர்க்கும் . . . . [05]

வரைகோள் அறியாச் சொன்றி,
நிரைகோற் குறுந்தொடி தந்தை ஊரே.
- பேயனார்.

பொருளுரை:

பாக! பெரியவர்களுக்கு நீரொடு தானம் பண்ணி எஞ்சிய பொருளையும் யாவருக்கும் தடை செய்தலை அறியாத சோற்றையும் உடைய வரிசைப்பட்ட திரட்சியை உடைய குறிய வளைகளை அணிந்த தலைவியினுடைய தந்தைக்குரிய ஊரானது கவலைக் கிழங்கைக் கல்லியதனால் உண்டான அகன்ற வாயை உடைய சிறிய குழி கொன்றையினது ஒள்ளிய மலர் பரவப்பெற்று செல்வருக்குரிய பொன்னையிட்டு வைக்கும் பெட்டியினது மூடியைத் திறந்து வைத்தாற் போன்ற தோற்றத்தை உடைய கார்காலத்தை ஏற்றுக் கொண்ட முல்லை நிலத்தின் கண்ணது.

முடிபு:

குறுந்தொடியின் தந்தையூர், புறவினது.

கருத்து:

முல்லை நிலத்தின் இடையே தோன்றும், அதுவே தலைவியின் ஊராகும்.