குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 285

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கூறிச் சென்ற பருவம் கண்டு வேறுபட்ட தலைவியைநோக்கித் தோழி வற்புறுத்தினாளாக, அவளுக்கு, "தலைவர் கூறிய பருவம் இதுவே. யான் ஒவ்வொரு நாளும் அவர் வரவை நோக்கி நிற்கின்றேன்; அவர் வந்திலர்" என்று தலைவி வருந்திக் கூறியது.

வைகல் வைகல் வைகவும் வாரார்;
எல்லா எல்லை எல்லவும் தோன்றார்;
யாண்டு உளர்கொல்லோ? - தோழி! - ஈண்டு இவர்
சொல்லிய பருவமோ இதுவே; பல் ஊழ்
புன் புறப் பெடையொடு பயிரி, இன் புறவு . . . . [05]

இமைக்கண் ஏது ஆகின்றோ! - ஞெமைத் தலை
ஊன் நசைஇப் பருந்து இருந்து உகக்கும்
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
- பூதத் தேவனார்.

பொருளுரை:

தோழி! இனிய ஆண் புறா பல முறை புல்லிய புறத்தை உடைய பெண் புறாவை அழைத்து இமைப்பொழுதில் எத்தகைய இன்பத்தை உடையதாக ஆகின்றது! இங்ஙனம் அவைஇருப்பவும் ஞெமை மரத்தின் உச்சியில் இறந்தோரது தசையை விரும்பி ஒற்றைப் பருந்து இருக்கின்ற வானளவும் உயர்ந்த விளக்கத்தை உடைய மலையைக் கடந்து சென்ற தலைவர் நாள் தோறும் விடியற் காலம் நீங்கிப் பகல் வரவும் அப்பகல் காலத்தில் வந்திலர்; எல்லாப் பகலின் எல்லையாகிய இரவிலும் மீண்டு வந்து தோன்றார்; எங்கே இருக்கின்றாரோ? ஈண்டு இவர் சொல்லிய பருவம் இதுவே; இங்கே இவர் மீண்டு வருவேன் என்று சொல்லிய பருவம் இதுவே. பிறிதன்று.

முடிபு:

தோழி, மலையிறந்தோர் வைகவும் வாரார்; எல்லைஎல்லையும் தோன்றார்; யாண்டுளர் கொல்? இவர் சொல்லிய பருவமோ இதுவே.

கருத்து:

தாம் கூறிச் சென்ற பருவம் வந்த பின்பும் தலைவர் வந்திலர்.