குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 217

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

இற்செறிப்பு முதலிய காவல் மிகுதியால், தலைவனுடன் நீ உடன்போக்கில் செல்லக் கடவை என்று தோழி குறிப்பால் தலைவியிடம் கூறியது.

தினை கிளி கடிக எனின் பகலும் ஒல்லும்
இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல்,
‘யாங்குச் செய்வாம் எம் இடும்பை நோய்க்கு’ என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப், பிறிது செத்து,
ஓங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற . . . . [05]

ஐதே காமம், யானே
‘கழிமுதுக் குறைமையும்’ பழியும் என்றிசினே.
- தங்கால் முடக்கொல்லனார்.

பொருளுரை:

உயர்ந்த மலை நாடனாகிய தலைவனுடன் நான் பேசினேன். “அன்னை, கிளியை விரட்டுவதற்காக எங்களைத் தினைப் புனத்திற்கு அனுப்புவாள். நீ வருவதற்குப் பொருத்தமான நேரம் அது. நீ இரவில் வந்தால் நாங்கள் அஞ்சுவோம். இந்தக் காதல் நோய்க்குப் பதில் யாது?” என நான் அவனிடம் கேட்டேன். சிறிது நேரம் சிந்தித்து விட்டு, பெருமூச்சு விட்டான். “காதல் நுட்பமானது. நீ நினைப்பது சரி தான். ஆனால் அதனால் பழியும் ஏற்படலாம்”, என்று நான் அவனிடம் சொன்னேன்.

குறிப்பு:

ஐதே: ஐ - உரிச்சொல், ஏகாரம் அசை நிலை, யானே - ஏகாரம் அசை நிலை, குறைமையும் - உம் அசை நிலை, பழியும் - உம் அசை நிலை, என்றிசினே: ஏகாரம் அசை நிலை. கிளி கடி: அகநானூறு 118 - குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள், அகநானூறு 194 - கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும், குறுந்தொகை 142 - புனக் கிளி கடியும் பூங்கண் பேதை, குறுந்தொகை 198 - படுகிளி கடிகம் சேறும், குறுந்தொகை 217 - தினை கிளி கடிக எனின், குறுந்தொகை 291 - ஏனல் படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே இசையின் இசையா இன்பாணித்தே, குறுந்தொகை 360 - ஏனல் உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே, பதிற்றுப்பத்து 78 - மெல் இயல் மகளிர் ஒல்குவனர் இயலிக் கிளி கடி மேவலர் புறவு தொறும் நுவல. மன்ற - மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17). சின் - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை - ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

சொற்பொருள்:

தினை கிளி கடிக எனின் - தினையை உண்ண வரும் கிளிகளை விரட்டு, பகலும் ஒல்லும் - பகல் நேரம் பொருத்தமானது, இரவு நீ வருதலின் - இரவில் நீ வந்தால், ஊறும் அஞ்சுவல் - இடையூறு ஏற்படுமோ என்று அஞ்சுகின்றோம், யாங்குச் செய்வாம் - என்ன செய்வது, எம் இடும்பை நோய்க்கு - இந்தக் காதல் நோய்க்கு, என - என, ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு - அங்கு நான் கூறியப் பின்னர், பிறிது செத்து - சிறிது நேரம் சிந்தித்து, ஓங்குமலை நாடன் - உயர்ந்த மலையின் தலைவன், உயிர்த்தோன் - பெருமூச்சு விட்டான், மன்ற - உறுதியாக, ஐதே - நுட்பமானது, மென்மையானது, காமம் - காதல், யானே - நானே, கழிமுதுக் குறைமையும் - நீ நினைத்தவாறு செய்வது மிக்க அறிவுடையது, பழியும் என்றிசினே - பழியும் ஏற்படலாம் என்று சொன்னேன்