குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 226

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாள் எனக் கவன்ற தோழியை நோக்கி, “தலைவன் என்னை மணந்த பின் என் நலன் இழந்தேன்” என்று தலைவி வருந்திக் கூறியது.

பூவொடு புரையும் கண்ணும், வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என
மதி மயக்குறூஉம் நுதலும், நன்றும்
நல்லமன்; வாழி - தோழி! - அல்கலும்
தயங்கு திரை பொருத தாழை வெண் பூக் . . . . [05]

குருகு என மலரும் பெருந் துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.
- மதுரை எழுத்தாளனார் சேந்தம்பூதனார்.

பொருளுரை:

தோழி! இரவுதோறும் விளங்கிய அலைகளால் மோதப்பட்ட தாழையினது வெள்ளிய பூ நாரையைப் போல மலர்தலைச் செய்வதற்கு இடமாகிய பெரியதுறைகளை உடைய அகன்ற நீர்ப்பரப்பை உடைய சேர்ப்பனோடு நகுவதற்கு முன்பு தாமரை மலரை ஒத்த கண்களும் மூங்கிலைப் போல வெற்றியை உடைய அழகைப் பெற்ற தோள்களும் பிறை என்று கருதும்படி அறிவை மயங்கச் செய்யும் நெற்றியும் மிகவும் நல்லனவாக இருந்தன; அந்நிலைஇப்பொழுது கழிந்தது!

முடிபு:

தோழி, சேர்ப்பனொடு நகாஅவூங்கு, கண்ணும் தோளும் நுதலும் நல்லமன்!

கருத்து:

தலைவனது பிரிவினால் என் மேனி நலம் அழிந்தது.