குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 028

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பரிசப் பொருளுக்காகப் பிரிந்த காலத்தில் அவன் விரைந்து வராமையால் கவலையுற்ற தன் தோழியிடம் தலைவி கூறியது.

முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன்! யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்,
அலமரல் அசை வளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே? . . . . [05]
- ஔவையார்.

பொருளுரை:

சுழலை உடைய அசையும் காற்று என்னை வருத்த, என்னுடைய துன்ப நோயை அறியாமல் தூங்கும் இந்த ஊரில் உள்ளவர்களை முட்டுவேனா? தாக்குவேனா? ‘ஆ’ , ‘ஒல்’ எனக் கத்துவேனா, ஒரு காரணத்தை மேற்கொண்டு? என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை.

குறிப்பு:

பொ. வே. சோமசுந்தரனார் உரையில் பாடலின் முதல் சொல் ‘மூட்டுவேன்’ என்று உள்ளது. உ.வே. சாமிநாத ஐயரின் உரையில் ‘முட்டுவேன்’ என்று உள்ளது. உ. வே. சாமிநாதையர் உரை - முட்டுதல் உடம்பால் தீண்டுதல் என்றும் தாக்குதல் கோல் முதலிய கருவிகளால் தீண்டுதல் என்றும் கொள்க. முட்டுதல் எதிர்த்தலுமாம். சுவர் முதலியவற்றில் முட்டிக் கொள்வேனா தாக்கிக் கொள்வேனா என்று பொருள் கூறலும் ஆம். ஓரேன் (2) - உ. வே. சாமிநாதையர் உரை - இன்னது செய்வது என்பதை அறியேன், பொ. வே. சோமசுந்தரனார் உரை - யான் யாது செய்வதென்று தெரிகில்லேன், தமிழண்ணல் உரை - தனி ஒருத்தியாகிய யான். ஊர் (5) - உ. வே. சாமிநாதையர் உரை - ஊரினர், இரா. இராகவையங்கார் உரை - ஊர் என்பது செவிலி, தாய் முதலியோர். கொல் - ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt. அசை வளி (4) - உ. வே. சாமிநாதையர் உரை - அசைந்து வருகின்ற தென்றற் காற்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை - வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் கூதிர் காலமாகலின் வளி ஈதல் வாடை. அலமரல் - அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310). ஊர்க்கே - ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:

முட்டுவேன் கொல் - முட்டுவேனா, தாக்குவேன் கொல் - தாக்குவேனா, ஓரேன் - ஒன்றும் புரியவில்லை, யானும் - நானும், ஓர் - ஒரு, பெற்றி மேலிட்டு - ஒரு தன்மையை மேற்கொண்டு, ஒரு திறத்தால், ஒரு காரணத்தால், ஆஅ ஒல்லென - ஆ எனவும் ஒல் எனவும், கூவுவேன் கொல் - கத்துவேனா, அலமரல் - சுழலுதல், அசை - அசையும், வளி - காற்று, அலைப்ப - வருந்த, என் - என், உயவு - துன்ப, நோயறியாது - நோயை அறியாது, துஞ்சும் ஊர்க்கே - தூங்கும் ஊரில் உள்ளவர்களை (ஊர்க்கே - ஏகாரம் அசை நிலை)