குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 188
முல்லை - தலைவி கூற்று
முல்லை - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததைக் கண்ட தலைவி,“கார்காலம் வந்துவிட்டது, இன்னும் தலைவர் வந்திலர்!” என, தோழிக்குக் கூறி வருந்தியது.
முகை முற்றினவே, முல்லை முல்லையொடு
தகை முற்றினவே தண் கார் வியன் புனம்,
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்,
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே.
தகை முற்றினவே தண் கார் வியன் புனம்,
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்,
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே.
- மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
முகைமுற் றினவே முல்லை முல்லையொடு
தகைமுற் றினவே தண்கார் வியன்புனம்
வாலிழை நெகிழ்த்தோர் வாரார்
மாலை வந்தன்றென் மாணலங் குறித்தே.
தகைமுற் றினவே தண்கார் வியன்புனம்
வாலிழை நெகிழ்த்தோர் வாரார்
மாலை வந்தன்றென் மாணலங் குறித்தே.
பொருளுரை:
தோழி! முல்லைக்கொடிகளில் அரும்பு முதிர்ந்தன; தண்ணிய கார்காலத்தைஏற்ற அகன்ற முல்லை நிலங்கள் முல்லை மலர்களோடுஅழகு முதிர்ந்தன; எனதுமாட்சிமைப் பட்ட அழகைக் கெடுத்தலை எண்ணி மாலைக் காலம் வந்தது; என்னைப் பிரிந்து என் தூய ஆபரணங்களைநெகிழச் செய்த தலைவர் இன்னும் வந்தாரல்லர்.
முடிபு:
முல்லை முகை முற்றின; புனம் தகை முற்றின; மாலைவந்தன்று; இழை நெகிழ்த்தோர் வாரார்.
கருத்து:
கார்காலம் வந்த பின்பும் தலைவர் வந்திலர்.






