குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 199

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தாய் முதலியோர் தலைவியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல எண்ணியிருப்பதைத் தோழியால் அறிந்த தலைவன், “இனி இவளைப் பெறுவது அரிது போலும்! ஆயினும் என் காமநோய் என்றும் அழியாதது; பிறவிதோறும் தொடர்ந்து வருவது” என்று நெஞ்சை நோக்கிக் கூறியது.

பெறுவது இயையாது ஆயினும், உறுவது ஒன்று
உண்டுமன் வாழிய - நெஞ்சே! - திண் தேர்க்
கைவள் ஒரி கானம் தீண்டி
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல்
மை ஈர் ஓதி மாஅயோள்வயின் . . . . [05]

இன்றை அன்ன நட்பின் இந் நோய்
இறு முறை என ஒன்று இன்றி,
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே.
- பரணர்.

பொருளுரை:

நெஞ்சே! திண்ணிய தேரையுடைய கைவண்மையையுடைய ஓரியினது கானத்தைத் தீண்டி வீசுகின்ற காற்றைப் போல மணக்கின்ற நெறிப்பு அமைந்த கூந்தலாகிய மையைப்போன்ற தண்ணிய மயிரையுடைய மாமையை உடையோளிடத்து இன்றை நிலையைப் போன்று என்றும் உள்ள நட்பையுடைய இந்தக் காமநோயானது அழியுமுறை என்பது ஒன்று இல்லாமல் மறுமையில் வாழ்தற்குரிய உலகத்திலும் நிலைபேற்றை அடையும்; ஆதலின் தலைவியை இப்பிறவியின்கண் பெறுதல் நம்மாட்டுப் பொருந்தாதாயினும் மறுமை யுலகத்துப் பெறுவதாகிய நாம் அடையும் பயன் ஒன்று உண்டு.

முடிபு:

நெஞ்சே, இந்நோய் மறுமையுலகத்தும் மன்னுதல் பெறும்; பெறுவது இயையாதாயினும் உறுவதொன்றுண்டு.

கருத்து:

இனி இம்மையில் தலைவியைக் காணப்பெறேன்.