குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 255

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

வினைமேற் சென்ற தலைவன் தன் மாட்டுள்ள குறித்த இடத்தின்கட் செல்லாமல் இடையே மீள்வன் என்று கவன்ற தலைவியை நோக்கி, "அவர் தாம் செல்லும் பாலை நிலத்தில் யானை தன் சுற்றத்தைப் பாதுகாக்கும் காட்சியைக் கண்டு, நாமும் நம் இல்லறக் கடன் இறுப்பதற்கு நம் முயற்சி முற்றல் வேண்டும் என்று செல்வார்" என்று தோழி கூறியது.

பொத்து இல் காழ அத்த யாஅத்துப்
பொரி அரை முழுமுதல் உருவ குத்தி,
மறம் கெழு தடக் கையின் வாங்கி, உயங்கு நடைச்
சிறு கட் பெரு நிரை உறு பசி தீர்க்கும்
தட மருப்பு யானை கண்டனர் - தோழி! . . . . [05]

தம் கடன் இறீஇயர் எண்ணி, இடம்தொறும்
காமர் பொருட்பிணிப் போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே.
- கடுகு பெருந்தேவனார்.

பொருளுரை:

தோழி! தம்முடைய கடமையை நிறைவேற்றும் பொருட்டு கருதி இடங்கள் தோறும் விருப்பத்தை உடைய பொருண் முயற்சிக்கண் உள்ள உள்ளப் பிணிப்பினால் சென்ற நாம் விரும்பும் தலைவர் நம்மைப் பிரிந்து சென்றவழியில் புரையற்ற வயிரத்தை உடையனவாகிய அருவழியில் நின்ற யாமரங்களின் பொரிந்த திரண்ட அடியை உருவும்படி தன் கொம்பால் குத்தி வன்மை பொருந்திய வளைந்த கையினால் கொண்டு தந்து வருந்திய நடையையும் சிறிய கண்களையும் உடைய பெரியயானை வரிசையின் மிக்க பசியைத் தீர்க்கின்ற வளைந்த கொம்பை உடைய ஆண் யானையை கண்டார்.

முடிபு:

தோழி, இறீஇயர் எண்ணிப் போகிய காதலர் சென்றவாற்றில், யானை கண்டனர்.

கருத்து:

தலைவர் வினைமுற்றியே மீள்வர்.