குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 139

மருதம் - தோழி கூற்று


மருதம் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

பரத்தையர் இல்லத்திற்குத் சென்று திரும்பும் தலைவனுக்குத் தோழி வாயில் மறுத்தாள்.

மனை உறை கோழிக் குறுங்கால் பேடை,
வேலி வெருகு இன மாலை உற்றெனப்
புகுமிடம் அறியாது தொகுபுடன் குழீஇய
பைதல் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு,
இன்னாது இசைக்கும் அம்பலொடு . . . . [05]

வாரல், வாழியர் ஐய, எம் தெருவே.
- ஒக்கூர் மாசாத்தியார்.

பொருளுரை:

நீடு வாழ்வாயாக ஐயா! வீட்டில் வாழும் சிறிய கால்களையுடைய பெண் கோழி மாலை நேரத்தில் காட்டுப் பூனைகளுக்கு அஞ்சி வீட்டு வேலிக்குள் புக நினைக்கும். அது புகும் இடம் அறியாது, தன் குஞ்சுகளை ஆரவாரத்துடன் கூவி அழைப்பதைப் போல் மிகுந்த பழிச்சொற்கள் எழும், நீர் இங்கு வந்தால். ஆகையால் எங்கள் தெருவுக்கு வராதீர்!

குறிப்பு:

தெருவே - ஏகாரம் அசை நிலை. உ. வே. சாமிநாதையர் உரை - தன்னால் பாதுகாக்கப்பட்ட தன் துன்புற்ற பிள்ளையை வெருகு கவருமோ என்னும் அச்சத்தினால் கோழிப் பேடை கூவியது போலத் தம்பால் இருந்து வந்த தலைவனைத் தலைவி கவர்ந்து தன்பால் இருத்திக் கொள்வாளோ என்னும் அச்சத்தினால் பரத்தையர் பழிமொழி கூறினர் என்பது. வெருகினம் (2) - தலைவன் பாணரும் இளைஞரும் சூழ வருகின்றான் ஆகலின், வெருகினம் என்றாள். வாழியர் (6) - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - செற்றத்தால் வாழியர் என்றாள். பேடை - பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:

மனை உறை கோழி - வீட்டில் வாழும் கோழி, குறுங்கால் பேடை - குட்டையானக் காலை உடைய பெடை, வேலி - வேலி, வெருகு இன - காட்டுப் பூனை, மாலை உற்றென - மாலை நேரம் வந்து விட்டதால், புகுமிடம் அறியாது - புகுவதற்கான இடத்தை அறியாமல், தொகுபுடன் குழீஇய - சேர்ந்து கூடும் பொருட்டு (குழீஇய - சொல்லிசை அளபெடை), பைதல் பிள்ளைக் கிளை - துன்புற்ற தன் குஞ்சுகளை, பயிர்ந்தாஅங்கு - கூவி அழைத்ததுப் போல் (இசை நிறை அளபெடை), இன்னாது இசைக்கும் அம்பலொடு - இனிதாக இல்லாத பழிச்சொற்கள் எழும், வாரல் - வராதீர் (அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று), வாழியர் ஐய - வாழ்க ஐயா, எம் தெருவே - எங்கள் தெருவிற்கு