குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 170

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்த காலத்தில் அவனது பிரிவை யாற்றாளெனக் கவலையுற்ற தோழிக்கு, “தலைவனது நட்புக் கெடாதென்பதை யான் அறிந்துள்ளேன்; பலர் தமக்குத் தோற்றியவற்றைச் சொல்லுக. அதனால் யான் உறுதி நீங்கேன்” என்று தலைவி கூறியது.

பலவும் கூறுக அஃது அறியாதோரே,
அருவி தந்த நாள் குரல் எருவை
கயம் நாடு யானை கவள மாந்தும்
மலை கெழு நாடன் கேண்மை
தலை போகாமை, நற்கு அறிந்தனென் யானே . . . . [05]
- கருவூர்கிழார்.

பொருளுரை:

அறியாதவர்கள் பலரும் பலவற்றைக் கூறுகின்றனர். அருவி கொண்டு வரும் புதிய நாணலை கவளமாக உண்பதற்காகக் குளத்தை நாடும் யானைகள் உடைய மலை நாட்டவனின் கெடாத நட்பை நான் நன்கு அறிகின்றேன்.

குறிப்பு:

அறியாதோரே - ஏகாரம் அசைநிலை, யானே - ஏகாரம் அசைநிலை, தலைபோகாமை - தலை என்றது அசை நிலையாக நின்றது. பொ. வே. சோமசுந்தரனார் உரை - அறியாதோர் என்றது ஈண்டுத் தோழியை முன்னிலைப் புறமொழியாகக் கூறியதாம். உ. வே. சாமிநாதையர் உரை - கவளமாந்திய யானை பின்னும் அதனை வேண்டி வருவது போலப் பின்னும் தலைவன் வரும் என்பது குறித்தாள். பலரும் (1) - உ. வே. சாமிநாதையர் உரை - செவிலி முதலியோர், பொ. வே. சோமசுந்தரனார் உரை - அறியாதோர் என்றது ஈண்டுத் தோழியை முன்னிலைப் புறமொழியாகக் கூறியதாம்.

சொற்பொருள்:

பலவும் - பலரும், கூறுக அஃது - கூறுவது, அறியாதோரே - அறியாதவர்களே, அருவி தந்த - அருவிக் கொண்டு வந்த, நாள் - புதிய, குரல் - கொத்து, எருவை - இளம் கொறுக்கச்சி தட்டிகளை, கயம் - குளம், நாடு - நாடிச் செல்லும், யானை - யானைகள், கவள - கவளமாக, மாந்தும் - உண்ணும், மலைகெழு நாடன் - மலை நாடன், கேண்மை - நட்பு, தலை போகாமை - கெட்டுப் போகாமல், நற்கு - நன்கு, அறிந்தனென் யானே - நான் அறிவேன்