குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 383

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனுடன் செல்லத் தலைவி உடம்பட்டமை தெரிந்து அக்கருத்தைத் தலைவனுக்கு வெளியிட்டபின் அவன் வந்து நிற்ப, அப்பொழுது நாண் அழிதற்கு வருந்திய தலைவியை நோக்கி, “நின் உடம்பாட்டையறிந்தே அவனை வரச்செய்தேன்; இப்பொழுது மறுப்பின் என்செய்வேன்!” என்று தோழி கூறியது.

நீ உடம்படுதலின், யான் தர, வந்து,
குறி நின்றனனே, குன்ற நாடன்;
'இன்றை அளவைச் சென்றைக்க என்றி;
கையும் காலும் ஓய்வன ஒடுங்கத்
தீ உறு தளிரின் நடுங்கி, . . . . [05]

யாவதும், இலை, யான் செயற்கு உரியதுவே.
- படுமரத்து மோசிகீரனார்.

பொருளுரை:

நீ உடன்போக இயைந்த மையால் நான்கூற தலைவன் குறியிடத்தே வந்து நின்றான; நீயோ! இன்றையாகியபோதுகழிக என்று கூறினாய; கையும் காலும் ஓய்வனவாகி வருந்த நெருப்பில் விழுந்த தளிரைப் போல நடுங்கி நான் செய்யத்தக்கது ஒன்றும் இல்லை.

முடிபு:

நாடன் நின்றனன்; சென்றைக்கென்றி; அழுங்க நடுங்கிச் செயற்குரியது இலை.

கருத்து:

நீ தலைவனுடன் இப்பொழுதே செல்லுதல் நலம்.