குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 234

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

பருவ வரவின்கண் தோழியை நோக்கி, ”மாலைக் காலம் என்று தனியே ஒன்றை வரையறுத்துச் சிலர் கூறுவர். தமியராயினார்க்கு எல்லாப்பொழுதும் மாலைப் பொழுதே” என்று தலைவி கூறியது.

சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து,
எல்லுறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார், மயங்கியோரே
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும்
பெரும் புலர் விடியலும் மாலை . . . . [05]

பகலும் மாலை - துணை இலோர்க்கே.
- மிளைப்பெருங் கந்தனார்.

பொருளுரை:

தோழி! அறிவு மயங்கியோர் சூரியன் மறைந்து சென்றவானம் சிவப்பு நிறத்தை அடைய துன்பம்மிக்கு ஒளி மங்கிய பொழுதில் முல்லைப் பூ மலர்கின்ற மாலைக் காலம் என்று அதனை வரையறுத்துக் கூறுவர்; துணைவரைப் பிரிந்தவர்களுக்கு நீண்ட நகரத்தில் உச்சிக் கொண்டையை உடைய கோழி கூவுகின்ற பெரிய இராப் பொழுது புலர்கின்ற விடியற் காலமும் மாலைக் காலமாகும்; பகற் காலமும் மாலைக் காலமாகும்.

முடிபு:

மயங்கியோர் முல்லை மலரும் மாலையென்மனார்; துணையிலோர்க்கு விடியலும் மாலை; பகலும் மாலை.

கருத்து:

தலைவரைப் பிரிந்தமையால் நான் எப்பொழுதும் துன்பத்தை உடையவளானேன்.