குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 211

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்த காலத்தில், ‘‘சுரத்திடையே தம் துணையைப் பிரிந்த விலங்கும் பறவையும் கவல்வது கண்டு நாமும் அங்ஙனம் கவல்வோமென நினைந்து தலைவர் மீள்வரோ?” என ஐயுற்ற தலைவியை நோக்கி, “அவர் அத்தகைய அருள் உடையவரல்லர். நம்மைப் பிரிந்த வன்மையையுடை யார். ஆதலின் மீளார்” என்று தோழி கூறியது.

அம் சில் ஓதி ஆய் வளை நெகிழ
நொந்தும், நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்
எஞ்சினம் வாழி - தோழி! - எஞ்சாது
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ் சினை
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி . . . . [05]

ஆராது பெயரும் தும்பி
நீர் இல் வைப்பின் சுரன், இறந்தோரே.
- காவன்முல்லைப் பூதனார்.

பொருளுரை:

தோழி! குறைந்து வேனிலால் வெம்பிய மராமரத்தினது ஓங்குதலையுடைய வெவ்விய கிளையின்கண் வேனிற் காலத்து மலர்ந்த ஒற்றைப்பூங்கொத்தை தேனென்னும் சாதிவண்டோடு ஊதி அதன்கண் ஒன்றுமின்மையின் உண்ணாமல் மீள்கின்ற தும்பியென்னும் வண்டுகளையுடைய நீரில்லாத இடங்களையுடைய பாலை நிலத்தைக் கடந்தோரும் அழகிய சிலவாகிய கூந்தலையுடைய நினது அழகியவளைகள் நெகிழும்படி நம் விருப்பத்திற்குஉடம்பட்டு நம்பால் அருள் செய்யாராகி நம்மைப் பிரிந்து சென்றோருமாகிய தலைவர்பொருட்டு அஞ்சுதலை நீங்கினேம்.

முடிபு:

தோழி, சுரன் இறந்தோராகிய நீத்தோர்க்கு அஞ்சல் எஞ்சினம்.

கருத்து:

தலைவர் மீளார்.