குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 043

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவி, தோழியிடம் உரைத்தது.

செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே,
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே,
ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல்
நல் அராக் கதுவியாங்கு, என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே . . . . [05]
- ஔவையார்.

பொருளுரை:

தலைவர் செல்ல மாட்டார் என்று எண்ணி அவர் செலவை அழுங்காமல் சோர்ந்திருந்தேன் நான். பிரிவை உணர்த்தினால் இவள் உடன்பட மாட்டாள் என்று எண்ணி பிரிவு உணர்த்தலில் சோர்ந்திருந்தார் அவர். அவ்வழி, இருவரிடமும் உள்ள மனவலிகள் செய்த போரினால், நல்ல பாம்பு கடித்தாற்போல் வருந்துகின்ற என் நெஞ்சம் மேலும் சுழலுகின்றது.

குறிப்பு:

இகழ்ந்தனனே, இகழ்ந்தனரே, அலமலக்குறுமே - ஏகாரம் அசைநிலைகள்.

சொற்பொருள்:

செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே - தலைவர் செல்வார் செல்ல மாட்டார் என்று எண்ணி செலவு அழுங்காமல் சோர்ந்திருந்தேன், ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே - பிரிவை உணர்த்தினால் இவள் உடன்பட மாட்டாள் என்று எண்ணி அவர் பிரிவு உணர்த்தலில் சோர்ந்திருந்தார், ஆயிடை - அவ்வழி, இரு பேர் ஆண்மை செய்த பூசல் - இருவரிடமும் உள்ள ஆண்மைகள் செய்த போரினால் (ஆண்மை - ஆளுந்தன்மை), நல் அராக் கதுவியாங்கு - நல்ல பாம்பு கடித்தாற்போல், என் அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே - வருந்தும் என் நெஞ்சம் மேலும் சுழலுகின்றது