குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 321

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

நொதுமலர் வரையப் புக்க காலத்தில், "நான் அறத்தொடு நிற்பேன்" என்று தலைவிக்குத் தோழி கூறியது.

மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன்,
சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன்,
நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும்
மடம் ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை;
மன்ற மரையா இரிய, ஏறு அட்டு, . . . . [05]

செங் கண் இரும் புலி குழுமும்; அதனால்,
மறைத்தற் காலையோ அன்றே;
திறப்பல் வாழி - வேண்டு, அன்னை! - நம் கதவே.
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

பொருளுரை:

அன்னை! மடப்பம் வருதலையுடைய அரிவையே நினது மார்பைப் பொருந்தும் இனிய தலைவன் மலையில் உண்டாகிய செஞ்சந்தனத்தையும் முத்து மாலையையும் அணிந்த மார்பினனாகியும் சுனையில் மலர்ந்த குவளையினது வண்டுகள் நிறைந்த கண்ணியை உடையவனாகியும் நம்முடைய வீட்டிற்கு நள்ளிரவில் வந்து மீண்டு செல்வான்; அக்காலத்தில் மன்றத்தின்கண் உள்ள மரையாவானது நீங்க அதன் ஆணைக்கொன்று செவ்விய கண்களையுடைய கரிய புலி முழங்கும்; அதனால்! நம் ஒழுக்கத்தை மறைக்கும் காலம் இஃது அன்று; நமதுமந்தணத்தை வெளியிடுவேன்; இதனை நீ விரும்புவாயாக.

முடிபு:

அன்னை, அரிவை, நின் துணை, மார்பினன், கண்ணியன், வந்து பெயரும்; புலி ஏறு அட்டுக் குழுமும்; அதனால் மறைத்தற்காலை அன்று; நம் கதவு திறப்பல், நீ வேண்டு.

கருத்து:

நான் அறத்தொடு நிற்பேன்.