குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 339

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவியை நோக்கி, “தலைவனோடு அளவளாவிய காலத்தில் அவ்வொழுக்கம் நினக்கு இனிதாயிருந்தது; இப்பொழுது வருந்துதல் எவன்?” என்று தோழி கூறியது.

நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை
உறை அறு மையின் போகி, சாரல்
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன்
மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல்
இனிதுமன் வாழி - தோழி! - மா இதழ்க் . . . . [05]

குவளை உண்கண் கலுழப்
பசலை ஆகா ஊங்கலங்கடையே.
- பேயார்.

பொருளுரை:

தோழி! வாசனையையுடைய அகிலினது விளங்கிய செறிந்த புனத்தின்கண் எழுந்த நறிய புகையானது துளிகள் அற்ற வெண் மேகத்தைப்போலச் சென்று மலைச்சாரலிலுள்ள குறவர்களுடைய ஊரில் இறங்கும் நாட்டையுடைய தலைவன் பலவகை மலர்கள் கலந்த மாலையையணிந்த நின் நல்ல மார்பைத் தழுவுதல் கரிய இதழையுடைய குவளைமலரைப் போன்ற மையுண்ட கண்கள் அழும்படி பசலை உண்டாகாததன் முன்பு மிக இனியதாயிற்று.

முடிபு:

தோழி, பசலையாகா ஊங்கலங்கடை நாடன் மார்பு முயங்கல் இனிதுமன்.

கருத்து:

தலைவன் மணந்தக்கால் இன்புற்ற நீ அவன் நின்பொருட்டுப் பிரிந்தக்கால் துன்புறுதல் தக்கதன்று.