குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 330

மருதம் - தலைவி கூற்று


மருதம் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவி, "தலைவர் சென்றநாட்டில் என்னை வருத்தும் மாலையும் புலம்பும் இலவோ?" என்று தோழிக்குக் கூறியது.

நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து எடுத்துத்
தலைப் புடைப் போக்கித் தண் கயத்து இட்ட
நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும்
பேர் இலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ
இன் கடுங் கள்ளின் மணம் இல கமழும் . . . . [05]

புன்கண் மாலையும், புலம்பும்,
இன்றுகொல் - தோழி! - அவர் சென்ற நாட்டே?
- கழார்க் கீரனெயிற்றியனார்.

பொருளுரை:

அழகையும் நன்மையையும் உடைய வண்ணாத்தி கஞ்சியிலே தோய்த்து எடுத்து முதல் தப்பலைத் தப்ப விட்டு, குளிர்ந்த நீருடைய குளத்தில் இட்ட பருத்த திரியை உடைய முறுக்கு உடைய ஆடையைப் போன்ற பெரிய இலையுடைய வெள்ளை பகன்றை மலர்கள் மலர்ந்து இனிய கடுமையான கள்ளைப் போல், நறுமணம் இல்லாமல் நாறுகின்ற துன்பத்தைத் தரும் மாலைக் காலமும் தனிமையும், அவர் பிரிந்துச் சென்ற நாட்டிலே இருக்குமா?

முடிபு:

தோழி, மாலையும் புலம்பும் அவர் சென்ற நாட்டு இன்றுகொல்?.

கருத்து:

மாலைக்காலமும் தனிமையும் எனக்கு வருத்தத்தை உண்டாக்குகின்றன.

குறிப்பு:

நாட்டே - ஏகாரம் அசைநிலை. இல - இல்லை என்பதன் விகாரம். புலைத்தி - அகநானூறு 34 - பசை கொல் மெல் விரல் பெருந்தோள் புலைத்தி, அகநானூறு 387 - பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய பூந்துகில், நற்றிணை 90 - வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு, குறுந்தொகை 330 - நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து, கலித்தொகை 72 - ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி, புறநானூறு 311 - புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை, புறநானூறு 259 முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல, கலித்தொகை 117 மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர் போழில் புனைந்த வரிப் புட்டில்.

சொற்பொருள்:

நலம் தகை - அழகும் தகையும், புலைத்தி - வண்ணாத்தி, பசை தோய்த்தெடுத்து - பசையில் முக்கி எடுத்து, தலைப்பு உடை போக்கி - முதலில் துணியை அலசி, தண் - குளிர்ந்த, கயத்து இட்ட - குளத்தில் போட்ட, நீரில் - நீரில், பிரியா - (நூல்) பிரியாத, பரூஉத் திரி - பருத்த திரித்த நூல் (பரூஉ- அளபெடை), கடுக்கும் - போலும், பேரிலை - பெரிய இலை, பகன்றை - பகன்றை மலர், (Indian jalap, Ipomaea Turpethum), பொதி அவிழ் - மொட்டு மலர்ந்து, வான் பூ - வெள்ளை மலர், இன் - இனிய, கடுங்கள்ளின் - கடுமையான கள்ளின், மணம் இல - நறுமணம் இல்லாமல், கமழும் - கமழும், புன்கண் - வருத்தமான, மாலையும் - மாலையும், புலம்பும் - தனியாக இருந்து வருந்தும், இன்று கொல் - இல்லையா? தோழி - தோழி, அவர் சென்ற நாட்டே - அவர் சென்ற நாட்டில்