குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 235

பாலை - தலைவன் கூற்று


பாலை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

களவுக் காலத்தில் வினையின் பொருட்டுப் பிரிந்து சென்ற தலைவன் மீளும்பொழுது பாகன் கேட்ப வாடைக் காற்றிடம் கூறுதல்.

ஓம்புமதி வாழியோ வாடை! பாம்பின்
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக்
கல் உயர் நண்ணியதுவே, நெல்லி
மரை இனம் ஆரும் முன்றில்
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே . . . . [05]
- மரயேண்டனார்.

பொருளுரை:

வாடைக் காற்றே! நீ நீடு வாழ்வாயாக! நெல்லிக்காயை மரை மான் இனம் உண்ணுகின்ற முற்றத்தையுடைய, புல்லால் வேயப்பட்ட குடிசைகளைக் கொண்ட, ஊரானது, பாம்பின் தொங்குகின்ற தோலை ஒக்கும் தூய வெள்ளை அருவியை உடைய மலையின் உயரத்தில் பொருந்தியது. அங்குள்ள என் தலைவியைப் பாதுகாப்பாயாக!

குறிப்பு:

வாழியோ - ஓகாரம் அசை நிலை, நண்ணியதுவே - ஏகாரம் அசை நிலை, ஊரே - ஏகாரம் அசை நிலை. அகநானூறு 327 - செவ் வரை கொழி நீர் கடுப்ப அரவின் அவ்வரி உரிவை அணவரும் மருங்கில். இரா. இராகவையங்கார் உரை - இன மரை உண்ணும் முற்றம் என்றது இவை கண்டு தான் தலைவனொடு கூடி வாழாமை கருதி நெஞ்சு நொந்து தலைவன் வரவு நோக்கி இருப்பாள் என்ற குறிப்பிற்று. மழைக் காலத்துக்குப் பிந்தியது வாடையாதலான் வற்றிச் சிறிதாக ஒழுகும் அருவியாதல் கருதி பாம்பின் தோல் கடுக்கும் என்றான். இதனால் ஒன்று மற்றொன்றாகத் தோன்றுதல் காட்டி வரைய இருக்கும் தன்னைத் தலைவி வேறாகக் கருதி வருந்துவாள் என்பது குறித்தான். மதி - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26).

சொற்பொருள்:

ஓம்புமதி - பாதுகாப்பாயாக (மதி - முன்னிலை அசை), வாழியோ - நீடு வாழ்வாயாக, வாடை - வாடைக் காற்றே, பாம்பின் தூங்கு தோல் கடுக்கும் - பாம்பின் தொங்குகின்ற தோலை ஒக்கும், தூ வெள் அருவிக் கல் உயர் நண்ணியதுவே - தூய வெள்ளை அருவியை உடைய மலையின் உயரத்தில் பொருந்தியது, நெல்லி மரை மான் இனம் ஆரும் முன்றில் - நெல்லிக்காயை மரை இனம் உண்ணுகின்ற முற்றத்தையுடைய (முன்றில் - இல்முன்), புல் வேய் குரம்பை - புல்லால் வேயப்பட்ட குடிசைகள், நல்லோள் ஊரே - நல்ல தலைவியின் ஊர்