குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 186

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வரவும் அவன் வாராமையால் தலைவி துயருறுவாள் என்று வருந்திய தோழியை நோக்கி, “தலைவனை நினைந்து துயிலேன் ஆயினேன்” என்று தலைவி கூறியது.

ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லைப் புனத்த, முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்குத்,
துயில் துறந்தனவால் தோழி, என் கண்ணே.
- ஒக்கூர் மாசாத்தியார்.

பொருளுரை:

ஆரவாரத்தையுடைய இடியுடன் மேகம் மழைபெய்து கலந்த முல்லை நிலத்தில் உள்ள மென்மையான முல்லைக் கொடிகள் பற்களைப் போன்று அரும்பும் நாடனுக்காக, என் கண்கள் உறக்கத்தைக் கைவிட்டன.

குறிப்பு:

தலைமணந்த - தலை அசை நிலை, துறந்தனவால் - ஆல் அசைநிலை, கண்ணே - ஏகாரம் அசைநிலை. பற்களைப் போன்ற அரும்பு: குறுந்தொகை 126 - முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக, குறுந்தொகை 162 - சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை, குறுந்தொகை 186 - முல்லை மென் கொடி எயிறு என முகையும், நற்றிணை 316 - மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய் தருவேம் என. கலி - கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

சொற்பொருள்:

ஆர்கலி ஏற்றொடு - ஆரவாரத்தையுடைய இடியுடன், கார் தலைமணந்த - மேகம் மழை பெய்து கலந்த, கொல்லைப் புனத்த - முல்லை நிலத்தில் உள்ள, முல்லை மென் கொடி எயிறு என முகையும் நாடற்கு - மென்மையான முல்லைக் கொடிகள் பற்களைப் போன்று அரும்பும் நாடனுக்கு, துயில் துறந்தனவால் தோழி, என் கண்ணே - உறக்கத்தை ஒழிந்த தோழி என்னுடைய கண்கள்