குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 187

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

வரைப் பொருட்குப் பிரிந்த தலைவன் நீட்டித்ததால் அவனைக் குறைக் கூறிப் பழித்தாள் தோழி. தலைவி அவள் கூற்றை மறுத்துத் தலைவனைப் புகழ்ந்தது.

செவ்வரைச் சேக்கை வருடை மான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்திப்
பெருவரை நீழல் உகளும் நாடன்,
கல்லினும் வலியன் தோழி,
வலியன் என்னாது, மெலியும் என் நெஞ்சே . . . . [05]
- கபிலர்.

பொருளுரை:

செங்குத்தான மலையில் உறையும் வருடை மானின் குட்டி தன் தாயின் மடியிலிருந்து ஒழுகும் பாலை நிரம்பப் பருகி, பெரிய மலைப்பக்கத்தில் உள்ள நிழலில் துள்ளும் நாட்டையுடைய தலைவன், கல்லைக் காட்டிலும் வலிமையுடையவன் தோழி! அவன் வன்மையுடையவன் என்று கருதாமல் அவன்பொருட்டு மெலிகின்றது என்னுடைய நெஞ்சம்.

குறிப்பு:

உ. வே. சாமிநாதையர் உரை - வருடையின் மறி பாலை ஆர மாந்தி வரை நிழலில் உகளும் நாடன் என்றது, தலைவன் வரைதற்குரிய பொருள் நிரம்பப் பெற்று ஈண்டு வந்து வரைந்து கொண்டு இல்லறம் நடத்துவான் என்ற குறிப்பையுடையது. நீழல் - நிழல் என்பதன் விகாரம். நெஞ்சே - ஏகாரம் அசைநிலை. மறி - மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

சொற்பொருள்:

செவ்வரைச் சேக்கை - செம்மையான மலையில் உறையும், செங்குத்தான மலையில் உறையும், அழகான மலையில் உறையும், வருடை மான் மறி - வருடை மானின் குட்டி, சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி - தாயின் மடியிலிருந்து ஒழுகும் பாலை நிரம்பப் பருகி, பெருவரை நீழல் உகளும் நாடன் - பெரிய மலைப்பக்கத்தில் உள்ள நிழலில் துள்ளும் நாட்டையுடைய தலைவன், கல்லினும் வலியன் தோழி - கல்லைக் காட்டிலும் வலிமையுடையவன் தோழி, வலியன் என்னாது, மெலியும் என் நெஞ்சே - அவன் வன்மையுடையவன் என்று கருதாமல் அவனுக்காக மெலியும் என்னுடைய நெஞ்சம்