குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 388

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைமகள் தன்னுடன் வருதற்கு உடம்பட்டமையை உணர்ந்த தலைவன் பாலை நிலத்தின் இன்னாமையையும் அதில் நடக்கமாட்டாத தலைவியினது மென்மையையும் கருதிப் போதற்கு ஒருப்படானாக, “நும்மொடுவரின் தலைவிக்குப் பாலை இனியதாகும்” என்று தோழிகூறிச் செலவு உடம்படச் செய்தது.

நீர் கால் யாத்த நிரை இதழ்க் குவளை
கோடை ஒற்றினும் வாடாதாகும்;
கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ
உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்தன்ன
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின், . . . . [05]

யானை கைம்மடித்து உயவும்
கானமும் இனிய ஆம் நும்மொடு வரினே.
- அவ்வையார்.

பொருளுரை:

நீரைத் தன்னுடைய அடியிலே கட்டப்பெற்ற வரிசையாகிய இதழ்களையுடைய குவளை மலரானது மேல்காற்று வீசினாலும் வாடாததாகும் கவணைப்போன்ற நுகத்தின் பிணிப்புப் பொருதமையால் வருந்துதலையுடைய உப்புவாணிகருடைய எருதுகள் பூட்டிய வண்டிகளின் தொகுதியை வரிசையாக வைத்தாற் போன்ற உலர்ந்த மரக்கிளைகளை பிளத்தற்ரிய வன்மை இல்லாமையால் யானை தன் துதிக்கையை மடித்து வருந்துகின்ற பாலைநிலங்களும் நும்மோடு வந்தால் தலைவிக்கு இனிமை யுடையனவாகும்.

முடிபு:

குவளை வாடாதாகும்; நும்மொடு வரின் - கானமும் இனிய ஆம்.

கருத்து:

தலைவி நும்மோடு வரின் பாலைநிலம் அவளுக்கு இனியதேயாகும்.