குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 109

நெய்தல் - தோழி கூற்று


நெய்தல் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கேட்கும் அண்மையனாக இருக்கையில் தலைவிக்குக் கூறுபவளாய், “தலைவர் நாடோறும் வந்து பயின்று செல்லும் இக்காலத்தில் நின் நுதற்கவின் மாறியது என்?” என்று தோழி, அவனுக்கு வரைய வேண்டியதன் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.

முடம் கால் இறவின் முடங்கு புறம் பெரு கிளை
புணரி இகு திரை தரூஉம் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது மன்னோ நல் நுதல் கவினே
- நம்பி குட்டுவனார்.

பொருளுரை:

வளைந்த காலையுடைய இறாமீனின் வளைந்த முதுகையுடைய பெரிய இனத்தை அலைகள் கீழே கொண்டு வந்து தரும் இடமாகிய துறையையுடைய தலைவன், உன்னுடன் கூடி இருந்த பொழுதும், உன்னுடைய அழகிய நெற்றியின் அழகு இவ்வாறு உள்ளதே. இது இரங்கற்குரியது!

குறிப்பு:

பொ. வே. சோமசுந்தரனார் உரை - தாழும் திரையே இறாமீனை உந்திக் கொணர்தலின் ‘இகு திரை தருஉம்’ என்றாள் வளமுடைய துறைவன் என்றவாறு. கடலலைகள் தரும் இறாலைத் தன் முயற்சியின்றிப் பெற்றமைகின்ற தலைவன் என்றது, ஊழால் தரப்பட்ட களவின்பமே நுகர்ந்து வரைதல் முயற்சியின்றி அமைபவன் என்றவாறு. இறைச்சி - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - தன்னை அடைந்த இறா மீனின் கிளையைக் கடல் கொடிய அலைகளால் கரைக்கண் யாரும் அறியத் தந்தாற்போல, அவனைப் பற்றுக்கோடாகக் கொண்ட நம்மையும், நமது கிளையொடு கூட்டித் தனது கொடிய களவொழுக்கத்தால் எல்லாரும் அறிந்து தூற்றுமாறு அவன் வைத்திட்டான் என்பதாம். மன் - கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4). புணரிய (3) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் - புணரும்பொருட்டே வருதலன்றி, வரைந்துகொண்டு அறஞ்செய்யும் கருத்திலன் என்று இகழ்ந்தவாறு.

சொற்பொருள்:

முடக்கால் இறவின் - வளைந்த காலையுடைய இறாமீனின், முடங்கு புறப் பெருங்கிளை - வளைந்த முதுகையுடைய பெரிய இனம், புணரி இகு திரை தரூஉந் துறைவன் - கடல் அலைகள் கீழே கொண்டு வந்து தரும் இடமாகிய துறையையுடைய தலைவன், புணரிய இருந்த ஞான்றும் - உடன் இருந்த பொழுதும், இன்னது நன்னுதல் கவினே - உன்னுடைய அழகிய நெற்றியின் அழகு இவ்வாறு உள்ளது, அது இரங்கற்குரியது