குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 351

நெய்தல் - தோழி கூற்று


நெய்தல் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைமகன்தமர் தலைவியை மணம்பேசுதற் பொருட்டு வந்தாராக, "அவருக்கு நமர் உடம்படுவார் கொல்லோ?" என்று ஐயுற்ற தலைவியை நோக்கி, "நமர் உடம்பட்டனர்" என்று தோழி கூறியது.

வளையோய்! உவந்திசின் - விரைவுறு கொடுந் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப் . . . . [05]

புன்னை ஓங்கிய புலால்அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே?
- அம்மூவனார்.

பொருளுரை:

வளையை அணிந்தோய் நம் சுற்றத்தார் விரைதலையுடைய வளைந்த காலையுடைய வளையின்கண் வாழும் நண்டு தன் கூரிய நகத்தினால் கீறிய ஈரமுள்ள மணலையுடைய நீருள்ள வழி சிதையும்படி இழுமென்னும் ஓசையுண்டாக இடியினது முழக்கத்தையுடைய அலைகள் உடையும் துறையையுடைய தலைவருக்கு நீ உரியாயென்றமையை உடம் பட்டுக் கூறினர்; அதனையறிந்து நான் மகிழ்ந்தேன்; விரிந்த மலர்களையுடைய புன்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்த புலால் நாற்றத்தை யுடைய சேரியிடத்துள்ள இனிய நகையையுடைய மகளிர் கூட்டத் தினரோடு இந்த ஆரவாரத்தையுடையஊர் இனியும் அலர்கூறும் அத்தன்மையையுடையதோ?

முடிபு:

வளையோய், நமர் துறைவர்க்கு உரிமை செப்பினர்; உவந்திசின்; இவ்வூர் இன்னும் அற்றோ?

கருத்து:

தலைவரது வரைவுக்கு நம் தமர் உடம்பட்டனர்.