குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 320

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் சிறைப்புறத்தானாக, "ஊரினர் கூறும் அலர் பெரிதாயிற்று" என்று தோழிக்குக் கூறுவாளாய், விரைவில் வரைந்து கொள்ள வேண்டு மென்பதை அவனுக்குத் தலைவி புலப்படுத்தியது.

பெருங் கடற் பரதவர் கோள் மீன் உணங்கலின்
இருங் கழிக் கொண்ட இறவின் வாடலொடு,
நிலவு நிற வெண் மணல் புலவ, பலஉடன்,
எக்கர் தொறும் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள்,
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ் . . . . [05]

பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப்
புன்னைஅம் சேரி இவ் ஊர்
கொன் அலர் தூற்றம், தன் கொடுமையானே.
- .

பொருளுரை:

தோழி! பெரிய கடலினிடத்தே பரதவர் கொண்ட மீனினது உலர்ந்த வற்றல் நீந்துதற்கு அரிய கழியினிடத்தே அவர் கைக்கொண்ட இறாமீனின் வாடிய வற்றலொடு நிலவினது நிறத்தைக் கொண்ட வெள்ளிய மணல் புலால் நாறும்படி பலஒருங்கே மணல்மேடு தோறும் பரவுகின்ற துறையையுடைய தலைவனோடு ஒரு நாளேனும் மகிழ்ந்து விளையாடிய பழி இல்லேம்; அங்ஙனம் இலமாகவும் செவ்வி அரும்பு மலர்ந்த பொன் போன்ற பூங்கொத்துக்கள் பொருந்திய வண்டுகள் ஒலிக்கின்ற கிளைகளை யுடைய புன்னைமரங்களையுடைய சேரிகள் உள்ள இவ்வூரார் தம்பாலுள்ள கொடிய தன்மையினால் வீணே பழிமொழிகளைக் கூறுவர்.

முடிபு:

துறைவனொடு ஒரு நாள் நக்கதோர் பழியுமிலம்; இவ்வூர்அலர் தூற்றும்.

கருத்து:

ஊரினர் கூறும் அலர் பெரிதாயிற்று.