குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 252

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனை ஏற்றுக் கொண்ட தலைவியை நோக்கி, "நீ சிறிதும் மாறுபாடின்றித் தலைவனை ஏற்றது என்?" என்ற தோழிக்கு, "அவன் பழியஞ்சுபவன்; ஆதலின் அவன் பழியை எடுத்துரையாது உடம்பட்டேன்" என்று தலைவி கூறியது.

நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன்
வருவதோர் காலை, இன்முகம் திரியாது,
கடவுட் கற்பின் அவன் எதிர் பேணி,
'மடவைமன்ற நீ' எனக் கடவுபு . . . . [05]

துனியல் வாழ் - தோழி! - சான்றோர்
புகழும் முன்னர் நாணுப;
பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே?
- கிடங்கிற் குலபதி நக்கண்ணனார்.

பொருளுரை:

தோழி! நெடுமையையும் திரட்சியையும் உடைய தோள்களில் உள்ள வளைகளை நெகிழச் செய்த கொடுமையை உடையவனாகிய குன்றுகள் பொருந்திய நாட்டை உடைய தலைவன் பரத்தையர் வீட்டினின்று வருங்காலத்தில் இனிய முகம் வேறுபடாமல் தெய்வத் தன்மையை உடைய கற்பினால் அவனை எதிர்முகமாகச் சென்று உபசரித்து நீ! நிச்சயமாக அறிவில்லாயாயினை என்று வினாவி வருத்தமுறாதே; அறிவானமைந்த பெரியோர் தம்மைப் புகழ்வதற்கு முன்னரும் நாணுவர்; அத்தகையோர் ஆராயு மிடத்து பழிச் சொல்லை யாம் கூற எங்ஙனம் பொறுப்பர்?

முடிபு:

தோழி, மடவை நீயெனக் கடவுபு துனியல்; சான்றோர் புகழு முன்னர் நாணுப; பழி யாங்கு ஒல்ப?

கருத்து:

தலைவன் பழிக்கு அஞ்சும் இயல்பினனாதலின் நான் அவனை ஏற்றுக் கொண்டேன்.