குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 322

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைமகனது வரவு நீட்டித்ததாகத் தோழி இயற்பழித்த விடத்து, தலைவன் வர, அஃதுணர்ந்த தலைவி, "நாம் அவரூருக்குப் போய் அவரோடு பழகுவோம்" என்று கூறியது.

அமர்க்கண் ஆமான் அம் செவிக் குழவி
கானவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து,
கானம் நண்ணிய சிறுகுடி பட்டென,
இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து,
மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு, . . . . [05]

மருவின் இனியவும் உளவோ?
செல்வாம் - தோழி! - ஒல்வாங்கு நடந்தே.
- .

பொருளுரை:

தோழி! மேவுதலையுடைய காட்டுப் பசுவின் அழகிய காதுகளையுடைய கன்று வேட்டுவர் எழுப்புவதனால் அஞ்சித் தன் இனத்தினின்றும் பிரிந்து சென்று காட்டினிடத்துப் பொருந்திய சிறிய ஊரிலேஅகப்பட்டதாக இளைய மகளிர் பாதுகாப்பக் கலந்து அவ்விடத்தை விரும்பி வீட்டின்கண் உறையும் வாழ்க்கையில் வன்மை பெற்றது போல கலந்து பழகுதலைக் காட்டிலும் இனிய பொருள்களும் இருக்கின்றனவோ? ஆதலின் நாமும் தலைவரோடு மருவும் பொருட்டு இயன்ற அளவில் நடந்து தலைவன் இருக்குமிடத்திற்குச் செல்வேம்.

முடிபு:

தோழி, ஆமான்குழவி எடுப்ப வெரீஇத் தீர்ந்து குடிப்பட்டென, ஓம்ப மரீஇ நயந்து வில்லியாங்கு, மருவின் இனியவும் உளவோ? நடந்து செல்வாம்.

கருத்து:

தலைவன் இருக்குமிடத்துக்கு யான் போவோமாக.