குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 395

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்தகாலத்தில் ஆற்றாளாகிய தலைவி, “நாம் தலைவனிருக்கும் இடத்திற்குச் செல்வேமாக” என்று தோழிக்குக் கூறியது.

நெஞ்சே நிறை ஒல்லாதே; அவரே,
அன்பு இன்மையின், அருள் பொருள் என்னார்;
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே;
அருவ நுங்கு மதியிற்கு இவணோர் போலக்
களையார் ஆயினும், கண் இனிது படீஇயர்; . . . . [05]

அஞ்சல் என்மரும் இல்லை; அந்தில்
அளிதோதானே நாணே
ஆங்கு அவர் வதிவயின் நீங்கப்படினே!
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

பொருளுரை:

என் நெஞ்சம் நிறுத்தலைச் செய்யஇயலாது; அத்தலைவர் அன்பின்மை காரணமாக அருளைப் பொருளென்று கருதாராயினர்; வன்கண்மையை மேற்கொண்டு என்னை வற்புறுத்தி அவ்வற்புறுத்தலில் வன்மையைப் பெற்றோர் அரவினால் உண்ணப்படும் சந்திரன்திறத்தில் இவ்வுலகத்திலுள்ளோர் செயல்போல எனது துன்பத்தை நீக்காரானாலும் இனிமையாகக் கண்படுகின்றனர்; அஞ்சற்க வென்று கூறி நம்மைத்தேற்றுவாரும் இங்கே இல்லை; ஆதலின் அங்கே அத்தலைவர் தங்குமிடத்திற்கு நாம் நீங்கிச் சென்றால் நம்நாணம் இரங்கத்தக்கது; அஃது அழியும்.

முடிபு:

நெஞ்சு நிறை ஒல்லாது; அவர் அருள்பொருள் என்றார்; வலித்து வல்லுநர் கண் இனிது படீஇயர்; அஞ்சலென்மரும் இல்லை; நீங்கப்படின் நாண் அளிது.

கருத்து:

நாம்தலைவர் உள்ள இடத்திற்குச் செல்வேமாக.