குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 374

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைவொடு புக்க காலத்துத் தமர் அவனை ஏற்றுக் கொண்டாராக, “யான் அறத்தொடு நிற்றலின் இது நிகழ்ந்தது” என்று தோழி தலைவிக்குக் கூறியது.

எந்தையும் யாயும் உணரக் காட்டி
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்,
மலைகெழு வெற்பன் தலைவந்து இரப்ப,
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே
முடங்கல் இறைய தூங்கணம்குரீஇ, . . . . [05]

நீடு இரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும் மயங்கிய மையல் ஊரே.
- உறையூர்ப் பல்காயனார்.

பொருளுரை:

நம் தந்தையும் தாயும் உணரும்படி அவர்களிடம் கூறி, நாம் மறைத்து வைத்த களவொழுக்கத்தை வெளிப்படும்படி நான் கூறிய பின்னர், மலைகள் பொருந்திய நாட்டவனான நம் தலைவன் வந்து பெண் கேட்க, நம் குடும்பத்தாரின் நன்மையைச் செய்யும் கொள்கையினால், ஒன்றுப்பட்டது, வளைந்த சிறகுகளை உடைய தூக்கணாங்குருவி உயர்ந்த கருமையான பனை மரத்தில் அமைத்த கூட்டைக்காட்டிலும் மயங்கிய இந்த மயக்கத்தையுடைய ஊர்.

முடிபு:

உணரக்காட்டிக் கிளந்தபின் வெற்பன் இரப்ப நன்றுபுரி கொள்கையின் ஊர் ஒன்றாகின்று.

கருத்து:

யான் அறத்தொடு நின்றமையின் நமர் தலைவனது வரைவுக்கு உடம்பட்டனர்.

குறிப்பு:

ஒன்றாகின்றே - ஏகாரம் அசை நிலை, ஊரே - ஏகாரம் அசை நிலை. பொ. வே. சோமசுந்தரனார் உரை - தூக்கணாங்குருவியின் கூடு ஒருவழிப்படாது பல்லாற்றானும் பின்னப்பட்டிருத்தலானே பல்லாற்றானும் மயங்கி அலர் தூற்றும் ஊர்க்கு உவமை ஆயிற்று.

சொற்பொருள்:

எந்தையும் யாயும் - நம் தந்தையும் தாயும், உணரக் காட்டி - உணரும்படி அவர்களிடம் கூறி, ஒளித்த செய்தி - நாம் மறைத்து வைத்த களவொழுக்கத்தை, வெளிப்படக் கிளந்த பின் - வெளிப்படும்படி நான் கூறிய பின்னர், மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப - மலைகள் பொருந்திய நாட்டவனான நம் தலைவன் வந்து பெண் கேட்க, நன்று புரி கொள்கையின் - நம்மையைச் செய்யும் கொள்கையினால், ஒன்றாகின்றே - ஒன்றுப்பட்டது, முடங்கல் இறைய தூங்கணம் குரீஇ - வளைந்த சிறகுகளை உடைய தூக்கணாங்குருவி (குரீஇ - இயற்கை அளபெடை), நீடு இரும் பெண்ணைத் தொடுத்த - உயர்ந்த பெரிய/கருமையான பனை மரத்தில் அமைத்த, கூடினும் - கூட்டைக்காட்டிலும், மயங்கிய மையல் ஊரே - மயங்கியது இந்த மயக்கத்தையுடைய ஊர்