குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 041

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்தகாலத்தில் தன்னுடைய பொலிவு இழந்த மேனியைக் கண்டு கவலையுற்ற தோழியிடம், “தலைவன் என்னுடன் இருப்பின், நான் மகிழ்வுற்று விளங்குவேன். பிரிவின், பொலிவு இழந்தவள் ஆவேன்” என்று தலைவி கூறியது.

காதலர் உழையராகப் பெரிது உவந்து
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற,
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலம்பு இல் போலப் புல்லென்று . . . . [05]

அலப்பென் தோழி, அவர் அகன்ற ஞான்றே.
- அணிலாடு முன்றிலார்.

பொருளுரை:

என் காதலர் என்னுடன் இருந்தால் விழாக் கொண்ட ஊரினர் மகிழ்வதைப் போல் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் தோழி. அவர் என்னைப் பிரிந்த காலத்தில், பாலை நிலத்தில் பொருந்திய அழகிய சிறு ஊரில், மனிதர்கள் நீங்கிச் சென்ற, அணில்கள் முன் முற்றத்தில் விளையாடும் தனிமையான வீட்டைப் போல, பொலிவு இழந்து வருந்துவேன்.

குறிப்பு:

ஊரின் - இன் உருபு ஒப்புப் பொருளது, ஞான்றே: ஏகாரம் அசை நிலை. நற்றிணை - 153 - வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே, கலித்தொகை 23 - நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் அல்குநர் போகிய ஊர் ஓரன்னர். மன்ற - மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17). புலம்பு - புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:

காதலர் - காதலர், உழையராக - உடன் இருந்தால், பெரிது உவந்து - மிகவும் மகிழ்ச்சி அடைந்து, சாறு கொள் ஊரின் - விழாவுடைய ஊரைப் போன்று, புகல்வேன் - மகிழ்வேன், மன்ற - உறுதியாக, அத்த - பாலை நிலத்தின், நண்ணிய - பொருந்திய, அம் - அழகிய, குடிச் சீறூர் - சிறிய ஊர், மக்கள் போகிய - மக்கள் அகன்ற, அணில் ஆடு - அணில் விளையாடும், முன்றில் - வீட்டு முற்றம், புலம்பு இல் போல - தனிமையான இல்லம் போல், புல்லென்று - பொலிவின்றி, அலப்பென் - நான் வருந்துவேன், தோழி - தோழி, அவர் - அவர், அகன்ற ஞான்றே - பிரிந்து சென்ற பொழுது