குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 335

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவி இற்செறிக்கப்படுதலை உணர்த்திய தோழி, “அவள் ஊர்வெற்பிடை நண்ணியது” என்றும், “அவள் வல்விற் கானவர் தங்கை” என்றும் கூறி இரவுக்குறி பெறுதற் கரிது என்பதைத் தலைவனுக்குப் புலப்பட வைத்தது.

நிரை வளை முன்கை நேர் இழை மகளிர்
இருங் கல் வியல் அறைச் செந் தினை பரப்பிச்
சுனை பாய் சோர்வு இடை நோக்கி, சினைஇழிந்த,
பைங் கண் மந்தி பார்ப்பொடு கவரும்
வெற்பு அயல் நண்ணியதுவே - வார் கோல் . . . . [05]

வல் விற் கானவர் தங்கைப்
பெருந் தோட் கொடிச்சி இருந்த ஊரே.
- இருந்தையூர்க் கொற்றன் புலவனார்.

பொருளுரை:

வலிய வில்லையும், நீண்ட அம்புக்களையும் உடைய கானவரின் தங்கையான பெரியத் தோளையுடைய தலைவியின் ஊர் கருமையான மலையில் உள்ளது. அங்குக் கையில் நிறைய வளையல்களையும் அழகிய நகைகளையும் அணிந்தப் பெண்கள் அகன்ற பாறைகளில் சிவந்த தினையைப் பரப்பி இருப்பார்கள். அவர்கள் சோர்வடைந்து சுனையில் பாய்ந்து குளிக்கும் வேளையில் பச்சைக் கண்களையுடைய பெண் குரங்குகள் தங்கள் குட்டிகளுடன் மரங்களின் கிளைகளிருந்து இறங்கி வந்து தினையைத் திருடி உண்ணும்.

முடிபு:

கொடிச்சி இருந்த ஊர் வெற்பிடை நண்ணியது.

கருத்து:

தலைவியை இரவுக்குறியிற் கண்டு அளவளாவுதல் அரிது.

குறிப்பு:

நண்ணியதுவே - ஏகாரம் அசை நிலை, ஊரே - ஏகாரம் அசை நிலை. பொ. வே. சோமசுந்தரனார் உரை - வார் கோல் வல் வில் கானவர் தங்கை என்றமையான் இரவுக்குறிக்கண் தலைவியை எய்தலாகாமையைக் குறிப்பால் உணர்த்தினாள். மகளிர் சோர்விடை நோக்கி மந்தி தினை கவரும் என்றது,’கானவர் சோர்வாலே நீ தலைவியை எய்தினாய்’ என்பது.

சொற்பொருள்:

நிரை வளை முன்கை - வளையல்கள் நிறைந்த முன் கை, நேர் இழை - நல்ல நகைகள், மகளிர் - பெண்கள், இருங்கல் - கருமையான மலை, வியல் அறை - அகன்றப் பாறை, செந்தினை - சிவப்பு நிறமுள்ள தினை, பரப்பி - பரப்பி, சுனை பாய் - சுனையில் பாயும், சோர்விடை நோக்கி - சோர்வுடைய நேரத்தைப் பார்த்து, சினை - மரக் கிளைகள், இழிந்து - இறங்கி, பைங்கண் மந்தி - பச்சைக் கண்களையுடைய பெண் குரங்குகள், பார்ப்போடு - குட்டியுடன், கவரும் - எடுக்கும், வெற்பு இடை - மலையிலே, நண்ணியதுவே - பொருந்தியது, வார்கோல் - நீண்ட அம்புகள், வல்வில் கானவர் தங்கை - வலிமையான வில்லையுடைய கானவனின் தங்கை, பெருந்தோள் - பெரியத் தோள், கொடிச்சி - கானவர் மகள், இருந்த ஊரே - இருந்த ஊர்