குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 336

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் இரவுக்குறி நயந்த காலத்துத் தோழி, “நீ இரவில் வருதல்தகாது; அதனால் இவள் வருந்துவள்” என்று அது மறுத்த வாய்பாட்டால் வரைவு கடாயது.

செறவர்க்கு உவகை ஆக, தெறுவர,
ஈங்ஙனம் வருபவோ? - தேம் பாய் துறைவ!
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்பக்
கடு மா நெடுந் தேர் நேமி போகிய
இருங் கழி நெய்தல் போல, . . . . [05]

வருந்தினள், அளியள் - நீ பிரிந்திசினோரே.
- குன்றியனார்.

பொருளுரை:

தேன் பரவுகின்ற துறையையுடைய தலைவ பகைவருக்கு மகிழ்ச்சி உண்டாக எமக்குத் துன்பமுண்டாகும்படி இங்கேஅறிஞர் வருவரோ? நீ பிரிந்த தலைவி சிறிய நாவையுடைய ஒள்ளிய மணிகள் விளரிப் பண்ணைப் போல முழங்க விரையும் குதிரையைப்பூண்ட நெடிய தேரினது சக்கரம் மேலே ஏறிப்போனமையால் நலிந்த கரிய கழியினிடத்துள்ள நெய்தல் மலரைப் போல வருத்தத்தையடைந்தாள்; இரங்கத்தக்காள்.

முடிபு:

துறைவ, வருபவோ? நீ பிரிந்திசினோள் வருந்தினள்; அளியள்.

கருத்து:

நீ இரவில் வருதல் நன்றன்று.