குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 300

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவன் தலைவியை நோக்கி, “நான்நின்னைப் பிரியேன்; பிரியின் ஆற்றேன்” என்றானாக அது கேட்டதலைவி, “பிரிவென்பது ஒன்றும் உண்டாங்கொல்?` என அஞ்சினாளை, “நீ அஞ்சற்க; நான் இவ்வுலகத்தைப் பெறுவேனாயினும் நின்னைப்பிரியேன்” என அவன் வற்புறுத்தியது.

குவளை நாறும் குவை இருங் கூந்தல்,
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்,
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி, மாஅயோயே!
நீயே, "அஞ்சல்" என்ற என் சொல் அஞ்சலையே; . . . . [05]

யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்,
விடல் சூழலன் யான், நின்றுடை நட்பே.
- சிறைக்குடி ஆந்தையார்.

பொருளுரை:

குவளை மலரின் மணத்தை வீசுகின்ற தொகுதியாகிய கரிய கூந்தலையும் ஆம்பல் மலரின் மணத்தை வீசும் தேன் பொதிந்த சிவந்தவாயையும் ஆழமாகிய நீரில் வளர்ந்த தாமரைப் பூந்தாதைப் போன்ற நுண்ணிய பல தேமற் புள்ளியையுமுடைய மாமை நிறமுடையாய் நீ! யான் பிரிவேனென்று கருதி அஞ்சாதேகொளென்ற எனது சொல்லைக் கேட்டு அஞ்சாதே கொள்; யான்! நினதுநட்பினை குறிய காலையுடைய அன்னப் பறவைகள் குவிதலையுடைய மணலின் கண்ணே தங்கியிருக்கும் கடல் வளைந்த நில வட்டத்தைப் பெறினும் விடுதலை நினையேன்.

முடிபு:

மாஅயோயே, நீ அஞ்சலை; யான் நின்னுடை நட்பு விடல் சூழலன்.

கருத்து:

நின்னைப் பிரியேன்.