குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 197

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

பருவ வரவின்கண், “தலைவர் வருவர்; நீ வருந்தற்க” எனத்துணிபு கூறிய தோழியை நோக்கி, “என் உயிரைக் கொள்ள வருவது போல இக்கூதிர்ப் பருவம் வந்தது; இனி என் செய்வேன்?” என்று தலைவி கூறியது.

யாது செய்வாம்கொல் - தோழி! - நோதக
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை
ஊதைஅம் குளிரொடு பேதுற்று மயங்கிய
கூதிர் உருவின் கூற்றம்
காதலர்ப் பிரிந்த எற் குறித்து வருமே? . . . . [05]
- கச்சிப்பேட்டு நன்னாகையார்.

பொருளுரை:

தோழி! நோதல் பொருந்தும்படி நீரை ஏற்றுக் கொண்ட மின் முதலிய தொகுதியை யுடையனவாகிய கார்காலத்தை ஏற்றுக் கொண்ட கிளைத்த மழையை யுடைய ஊதைக் காற்றினது குளிர்ச்சியோடு மிக மயங்கிக் கலந்த கூதிர்க் காலமாகிய உருவத்தை யுடைய கூற்றம் தலைவரைப் பிரிந்திருக்கும் என்னைக் கொல்லுதல் குறித்து வாரா நின்றது; யாதுசெய்வாம்!

முடிபு:

தோழி, கூதிர் உருவிற் கூற்றம் எற்குறித்து வரும்; யாது செய்வாம்?

கருத்து:

தலைவர் கூதிர்க் காலத்தும் வந்திலராதலின் இனி உயிர்வாழேன்.