குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 195

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கூறிச்சென்ற பருவ வரவின்கண், “எனக்குத் துன்பத்தைத் தரும் இம்மாலைக் காலத்தில் தாம் மேற்கொண்ட வினையை முடிக்கச் சென்றவர் எனது நிலையை உணராராயினர். அவர் யாண்டுள்ளாரோ!” என்று தலைவி கூறி வருந்தியது.

சுடர் சினம் தணிந்து குன்றம் சேரப்
படர் சுமந்து ஏழுதரு பையுள் மாலை
யாண்டு உளர் கொல்லோ வேண்டு வினை முடிநர்?
'இன்னாது, இரங்கும்' என்னார் அன்னோ
தைவரல் அசைவளி மெய் பாய்ந்து ஊர்தரச் . . . . [05]

செய்வுறு பாவை அன்ன என்
மெய் பிறிதாகுதல் அறியாதோரே!
- தேரதரனார்.

பொருளுரை:

தோழி! தடவுதலையுடைய அசைந்து வரும் காற்று உடம்பின் கண் பரந்து தீண்ட அதனால் அலங்காரம் செய்தலைப் பெற்றபாவையைப் போன்ற எனது மேனி வேறுபாடுடைய தாகுதலை அறியாதவராகிய தலைவர் தாம் விரும்பிச்சென்ற கருமத்தை முடித்துக் கொள்வாராய் கதிரவன் வெம்மை நீங்கி அத்தகிரியை அடைய நினைவு கூரும் துன்பத்தை மேற்கொண்டு வாரா நிற்கும் துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில் எங்கே இருக்கின்றனரோ? அந்தோ! இம்மாலைக் காலம் துன்பத்தைத் தருவது தலைவி வருந்துவாள் என்று நினையாராயினர்.

முடிபு:

என் மெய் பிறிதாகுதலை அறியாதோர், வேண்டு வினைமுடிநர் யாண்டுளர் கொல்? இரங்கு மென்னார்.

கருத்து:

என்னுடைய மெலிவையறிந்து தலைவர் இன்னும் மீண்டாரல்லர்.