குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 278

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்திருந்த காலத்து, நீ ஆற்றுதல் வேண்டுமென்றுவற்புறுத்தும் தோழியை நோக்கித் தலைவி, "அவர் எம்மை நினையாதுகொடியராயினர்" எனக் கூறியது.

உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து
முறி கண்டன்ன மெல்லென் சீறடிச்
சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார்
கொடியர் வாழி - தோழி! - கடுவன்
ஊழுறு தீம் கனி உதிர்ப்ப, கீழ் இருந்து, . . . . [05]

ஓர்ப்பன ஓர்ப்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே.
- பேரி சாத்தனார்.

பொருளுரை:

தோழி! ஆண் குரங்கு முதிர்ந்த இனிய பழங்களை மரத்தின்மேல் இருந்து உதிர்க்க அம்மரத்தின் கீழே இருந்து ஏற்பவற்றை ஏற்பவற்றைத் தின்னுகின்ற குட்டிகளை உடைய பெண் குரங்குகள் உள்ள மலையைக் கடந்து சென்ற தலைவர் மிக்க காற்றுக் கோதிய அழகிய தளிரை உடைய மாமரத்தினது தளிரைக் கண்டாற் போன்ற மெல்லிய சிறிய அடியை உடைய சிறிய பசிய தாது முதலியவற்றால் செய்த விளையாட்டுப் பாவையையும் எம்மையும் நினையார்; அவர் கொடுமையை உடையர்.

முடிபு:

தோழி, மலையிறந்தோர் உள்ளார் கொடியர்.

கருத்து:

தலைவர் எம்மை நினைந்திலர்.