குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 354

மருதம் - தோழி கூற்று


மருதம் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனை நோக்கி, “நீ எம்மை விரும்பாயாயின் எம்மை எம் தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் செல்வாயாக” என்று கூறும் வாயிலாகத் தோழி வாயில் மறுத்தது.

நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்;
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்;
தணந்தனைஆயின், எம்இல் உய்த்துக் கொடுமோ
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்க்
கடும் பாம்பு வழங்கும் தெருவில் . . . . [05]

நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே?
- கயத்தூர்கிழார்.

பொருளுரை:

நீரின் கண் நெடுநேரம் விளையாடினால் கண்களும் செந்நிறத்தை அடையும்; பன்முறை உண்டோரது வாயினிடத்தே தேனும் புளிப்பையுடைய தாகும்; ஆதலின் நீ எம்மைப் பிரிவை யாயின் அழகிய தண்ணிய பொய்கையையுடைய எம் தந்தையினது எம் ஊரின்கண்ணே நஞ்சின் கடுமையையுடைய பாம்புகள் ஓடும் தெருவில் நீ முன்பு நடுங்குதற்குரிய மிக்க துன்பத்தை நீக்கிய எம்மை எம்முடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவாயாக.

முடிபு:

நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்; தேனும் புளிக்கும்; தணந்தனையாயின் எம்மை எம் இல் உய்த்துக் கொடுமோ.

கருத்து:

எம்மை எம் தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் செல்வாயாக.