குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 210

முல்லை - தோழி கூற்று


முல்லை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவியைப் பிரிந்து சென்ற மீண்டுவந்த தலைவன், “யான்பிரிந்த காலத்தில் தலைவி துயருறாமல் நன்கு ஆற்றுவித்திருந்தாய்” என்று தோழியைப் புகழ, “என் செயல் ஒன்றுமின்று; காக்கை கரைந்த நன்னிமித்தத்தால் அவளை ஆற்றுவித்தேன்” என்று அவள் கூறியது.

திண் தேர் நள்ளி கானத்து, அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு,
ஏழு கலத்து ஏந்தினும், சிறிது, என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு . . . . [05]

விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.
- காக்கை பாடினியார் நச்செள்ளையார்.

பொருளுரை:

திண்ணிய தேரையுடையநள்ளி யென்னும் உபகாரியினது காட்டிலுள்ள இடையர்களுக்குரிய பல பசுக்கள் உண்டாக்கிய நெய்யோடு தொண்டியென்னும் ஊரிலுள்ள வயல்களில் முற்றும் ஒருங்கே விளைந்த வெண்ணெல்லரிசியால் ஆக்கிய வெம்மையையுடைய சோற்றை ஏழு பாத்திரங்களில் ஏந்திக் கொடுத்தாலும் என் தோழியாகிய தலைவியினுடைய பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்தை நீக்கும் பொருட்டு விருந்தினர் வரும்படி கரைதலைச் செய்த காக்கைக்குரிய அப்பலியானது சிற்றளவினதே யாகும்.

முடிபு:

சோறு ஏந்தினும் கரைந்த காக்கையது பலி சிறிது.

கருத்து:

காக்கை கரைதலாகிய நின்வரவுக்குரிய நிமித்தங் காட்டி, யான் தலைவியை ஆற்றுவித்தேன்.