குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 113

மருதம் - தோழி கூற்று


மருதம் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

பகற்குறியின்கண் வந்து அளவளாவிய தலைவனுக்குத் தாம் பயிலும் இடத்தை மாற்றி வேறிடங்கூறுவாளாய், “தலைவி காட்டாற்றங் கரையிலுள்ள பொழிலுக்கு எம்முடன் வருவாள்” என்று ஆண்டு வரும் வண்ணம் குறிப்பாகத் தோழி கூறியது.

ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறு கான் யாறே
இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால் பொழிலே யாம் எம்
கூழைக்கு எருமண் கொணர்கம் சேறும் . . . . [05]

ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே.
- மாதீர்த்தனார்.

பொருளுரை:

தலைவ! பொய்கை! ஊருக்கும் அருகிலுள்ளது; சிறிய காட்டாறு அப்பொய்கைக்குத் தூரியதும் அன்று; அணிமையிலே உள்ளது; அங்குள்ள சோலை அப்பொய்கையிலும் யாற்றிலும் உணவை ஆராய்கின்ற வெள்ளிய நாரைகளை அன்றி வேறு எவ்வுயிரும் நெருங்கல் ஒழிந்ததாகும்; நாங்கள் எமது கூந்தலுக்கு இட்டுப் பிசையும் பொருட்டு எருமண்ணைக் கொணர் வேமாய் அங்கேசெல்வேம்; பெரிய பேதைமையையுடைய தலைவி அங்கும் வருவாள்.

முடிபு:

பொய்கை ஊர்க்கும் அணித்து; யாறு சேய்த்து மன்று; பொழில் யாவதுந் துன்னல் போகின்றது; யாம் சேறும்; பெரும்பேதை ஆண்டும் வருகுவள்.

கருத்து:

பொய்கைக்கு அணித்தாகிய காட்டாற்றின் கரையிலுள்ள பொழிலகத்தே தலைவியைக் கண்டு அளவளாவலாகும்.