குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 201

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனும் தலைவியும் மணந்து கொண்டு இல்லறம் நடத்தும் மனைக்கண் சென்ற தோழி, ‘வரைந்து கொள்ளும் வரையில் நீ வேறுபடாமல் எங்ஙனம் ஆற்றியிருந்தாய்’ என்று கூற, ‘நான் ஆற்றியிருக்கும் வண்ணம் அயல் இல் கிழத்தி முன்பு தலைவன் வரவைக் கூறினாள். அவள் வாழ்க’ என்று தலைவி சொன்னது.

அமிழ்தம் உண்க அயல் இல் ஆட்டி!
பால் கலப்பு அன்ன தேக் கொக்கு அருந்துபு
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை
நெல்லியம் புளி மாந்தி அயலது
முள் இல் அம் பணை மூங்கில் தூங்கும் . . . . [05]

கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை, வரும் என்றாளே.
- பாடியவர் பெயர் கிடைக்கவில்லை.

பொருளுரை:

பக்கத்துவீட்டுப் பெண் அமிர்தம் உண்ணட்டும்! பாலைக் கலந்தாற்போன்ற இனிய மாம்பழத்தை தின்று கரிய மெல்லிய சிறகுகளையும் கூர்மையான நகங்களையும் உடைய வௌவால் புளித்த நெல்லிக்காயை உண்டு அருகில் உள்ள முள் இல்லாத பருத்த அழகிய மூங்கிலில் தொங்குகின்ற மூங்கில் உயர்ந்து வளர்ந்த சோலையுடைய மலைகள் பொருந்திய நாட்டையுடைய நம் தலைவன் வருவான் என்றாள்.

குறிப்பு:

நெல்லியம் புளி - அம் சாரியை, என்றோளே: ஏகாரம் அசை நிலை. உ. வே. சாமிநாதையர் உரை - தேமாம் பழத்தை உண்ட வௌவால் பின்பு மாறுபாட்ட சுவையையுடைய நெல்லிக்காயை உண்டு சிறிதும் ஊறு உண்டாக்காத முள்ளில்லாத மூங்கிலில் தூங்கியதுபோல, களவுப் புணர்ச்சியின்கண் இன்பம் துய்த்த தலைவன் அவ்வின்பத்திற்கு மாறாகிய இடையீடுகளையும் ஏற்றுப் பின் வரைந்து கொண்டு சிறிதும் ஏதமின்றி இன்பம் துய்க்கும் நிலையினான் என்பது.

சொற்பொருள்:

அமிழ்தம் உண்க - அமிர்தம் உண்ணட்டும், அயல் இல் ஆட்டி - பக்கத்து வீட்டுப்பெண், பால் கலப்பு அன்ன - பால் கலவை அன்ன, தேக் கொக்கு - இனிய மாம்பழம், அருந்துபு - உண்ணும், நீல மென்சிறை - கரு நீல நிற மெல்லிய சிறகு, வள் உகிர் - வலிய நகம், பறவை - வௌவால், நெல்லியம் புளி - புளிப்பான நெல்லிக்காய், மாந்தி - உண்டு, அயலது - அருகில், முள் இல் - முள் இல்லாத, அம் பணை - அழகிய திரண்ட, மூங்கில் - மூங்கில், தூங்கும் - தொங்கும், கழை - மூங்கில், நிவந்து ஓங்கிய - உயர்ந்து வளர்ந்த, சோலை - சோலை, மலை கெழு நாடனை - மலைகள் நிறைந்த நாட்டவனை, வரும் என்றாளே - அவன் வருவான் என்றாள்