குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 147

பாலை - தலைவன் கூற்று


பாலை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற இடத்துத் துயிலும் பொழுது அவளைக் கனாவிற் கண்டு பிரிவாற்றாமற் சொல்லியது.

வேனிற் பாதிரிக் கூன் மலர் அன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை,
நுண் பூண், மடந்தையைக் தந்தோய் போல,
இன் துயில் எடுப்புதி - கனவே!
எள்ளார் அம்ம, துணைப் பிரிந்தோரே . . . . [05]
- கோப்பெருஞ் சோழன்.

பொருளுரை:

கனவே! வேனிற்காலத்தில் மலரும் பாதிரியினது வளைந்த மலரினது துய்யைப் போன்ற மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாமையையும் நுண்ணிய தொழிலையுடைய ஆபரணத்தையும் உடைய தலைவியை கொணர்ந்து கொடுத்தாயைப் போல இனிய துயிலினின்றும் எழுப்பு கின்றாய் தம் துணைவியரைப் பிரிந்தோர் நின்னை இகழார்.

முடிபு:

கனவே, இன்றுயில் எடுப்புதி; துணைப் பிரிந்தோர் எள்ளார்.

கருத்து:

தலைவியைக் கொணர்ந்து காட்டிய கனவிற்கு யாது கைம்மாறு செய்வேன்!