குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 365

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

"யான் வரையுமவ்வளவும் தலைவி ஆற்றுவளோ?” என்று கேட்ட தலைவனை நோக்கித் தோழி, “இவள் ஆற்றாள்” என்பது படச்சொல்லியது.

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே
துன் அரு நெடு வரைத் ததும்ப அருவி
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும்
மருங்கில் கொண்ட பலவின் . . . . [05]

பெருங் கல் நாட! நீ நயந்தோள் கண்ணே.
- மதுரை நல்வெள்ளியார்.

பொருளுரை:

நெருங்குதற்கு அரிய, உயர்ந்த மலையில் உள்ள தண்ணென்ற ஒலியை உடைய முரசைப் போன்ற ஆரவாரத்தை வெளிப்படுத்தும் அருவிகளையும், பலா மரங்களையும் உடைய பெரிய மலையின் நாடனே!

உன்னால் விரும்பப்படும் தலைவியின், சங்குகளை அறுத்துச் செய்த வளையல்கள், வழுக்கி விழுகின்றன. அவளுடைய கண்கள் நாள்தோறும் துயில் இல்லாது, கலங்கி, நீர்த்துளிகள் நீங்காதனவாக உள்ளன.

முடிபு:

நாட, நீ நயந்தோள் கண் பாடில; கலிழ்ந்து பனிஆனா.

கருத்து:

இவள் நின்னைப் பிரிந்து ஆற்றியிராள்.

குறிப்பு:

ஆனாவே - ஏகாரம் அசைநிலை. கண்ணே - ஏகாரம் அசைநிலை. இல - இல்லை என்பதன் விகாரம்.

சொற்பொருள்:

கோடு ஈர் இலங்கு வளை - சங்குகளை அறுத்துச் செய்த வளையல்கள், நெகிழ - நெகிழ, நாளும் - நாள்தோறும், பாடு இல - துயில் இல்லை, கலிழ்ந்து - கலங்கி, பனி ஆனாவே - நீர்த்துளிகள் நீங்காதனவாக, துன் அரு நெடு வரை - நெருங்குதற்கு அரிய உயர்ந்த மலை, ததும்பிய அருவி - ஒலித்த அருவி, தண்ணென் முழவின் - தண்ணென்ற ஒலியை உடைய முரசைப் போன்று, இமிழ் இசை காட்டும் - ஆரவாரத்தை வெளிப்படுத்தும், மருங்கில் கொண்ட பலவின் - அருகில் கொண்ட பலா மரங்களை உடைய, பெருங்கல் நாட - பெரிய மலையின் நாடனே, நீ நயந்தோள் கண்ணே - நீ விரும்பியவளின் கண்கள்