குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 111

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் தடுப்புக்குப் பின் இருப்பதை அறிந்த தோழி, அவன் கேட்கும்படியாகத் தலைவியிடம் கூறுகின்றாள். வரைவு நீட்டித்தவழி தலைவி வேறுபாடு கண்டு வெறியெடுப்பக் கருதிய தாயது நிலைமையைத் தோழி கூறியது.

மென் தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்
வென்றி நெடு வேள் என்னும் அன்னையும்
அது என உணரும் ஆயின் ஆயிடைக்
கூழை இரு பிடி கை கரந்துஅன்ன
கேழ் இரு துறுகல் கெழு மலை நாடன் . . . . [05]

வல்லே வருக தோழி நம்
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே
- தீன்மதி நாகனார்.

பொருளுரை:

தோழி! கரிய சிறு பெண் யானைகள் தும்பிக்கையின்றி இருப்பது போல் தோன்றும் பெரிய பாறைகள் உடைய நாட்டவனான உன் காதலன் இப்பொழுது விரைந்து நம் வீட்டிற்கு வந்தால் மிகவும் வேடிக்கையாக இருக்கும். உன் மென்மையான தோள்கள் நெகிழ்ந்ததால், அது முருகனால் ஏற்பட்டது என்று எண்ணி, உன் அன்னை முருகன் கோவில் பூசாரியான வேலனை இங்கு அழைத்து இருக்கின்றாள்.

குறிப்பு:

சிறிதே - ஏகாரம் அசை நிலை. புலவரின் பெயர் தீன்மிதி நாகனார் என்று சில நூல்களில் உள்ளது. அகநானூறு 178 - பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 - பிடி மடிந்தன்ன குறும்பொறை, குறுந்தொகை 111 - கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந் துறுகல், கலித்தொகை 108 - பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 - புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம். நற்றிணை 34 - வேலன் வேண்ட வெறி மனை வந்தோய்...... முருகே. நெடுவேள் (2) - உ. வே. சாமிநாதையர் உரை - ஆகுபெயர், அவன் செயலுக்கு ஆயினமையின். வல்லே வருக என்றது தாய் விரைவில் வெறியெடுக்க கருதுவாள் என்பதையும் குறிப்பித்தது. இறைச்சி - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - பிடியின் கை மறைந்தாற்போல செழுமலை காணப்படும் நாடன் என்றதனானே, வரைவு நீட வந்த நமது வாட்டத்தை இல்லோர் மற்றொன்றானாயது என்று மாறுபடக் கருதுமாறு செய்திட்டான் என்பதாம். பாறையும் யானையும்: அகநானூறு 57 - இற்றிப் புன்தலை நெடுவீழ் இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளி பொரப் பெருங்கை யானை நிவப்பின் தூங்கும், அகநானூறு 178 - பிடி மடிந்தன்ன கல், அகநானூறு 269 - பிடி மடிந்தன்ன குறுந்தொகை 13 - மாசு அறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல், குறுந்தொகை 36 - துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும், குறுந்தொகை 111 - கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந்துறுகல், குறுந்தொகை 279 - மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் துகள் சூழ் யானையிற் பொலியத் தோன்றும், கலித்தொகை 108 - பிடி துஞ்சு அன்ன அறை, ஐங்குறுநூறு 239 - புகர் முக வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம். செல்லல் - செல்லல் இன்னல் (தொல்காப்பியம், உரியியல் 6).

சொற்பொருள்:

மென்தோள் - மென்மையான தோள்கள், நெகிழ்த்த செல்லல் - மெலியச் செய்தல், வேலன் - முருகன் கோவில் பூசாரி, வென்றி - வெற்றி, நெடுவேள் - நெடிய முருகன், என்னும் அன்னையும் - என்று எண்ணும் தாய், அதுவென உணரும் ஆயின் - அதுவென்று நினைப்பாள் ஆயின், ஆ இடை - அந்த வேளையில், கூழை - சிறிய, இரும்பிடி - கரிய பெண் யானை, கை கரந்தன்ன - தும்பிக்கை மறைந்ததைப் போல், கேழ் இரும் - கரிய நிறத்தையுடைய, துறுகல் - பெரிய பாறை, கெழு மலை - உடைய மலை, நாடன் - நாட்டவன், வல்லே வருக - விரைந்து வந்து, தோழி - தோழி, நம் - நம்முடைய, இல்லோர் - இல்லத்தில் உள்ளோர், பெரு நகை - பெரிய சிரிப்பு, காணிய - காண, சிறிதே - சிறிது நேரம்