குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 311

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

“இரவில் தலைவன் ஈண்டு வந்து செல்வதை ஆயத்தார் யாவரும் அறிந்தனர்; அதனால் அலர் பெருகியது” என்று தலைவி, தலைவன் சிறைப்புறத்தில் இருப்பத் தோழிக்குச் சொல்லியது.

அலர் யாங்கு ஒழிவ - தோழி! - பெருங் கடல்
புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும்,
நில்லாது கழிந்த கல்லென் கடுந் தேர்
யான் கண்டன்றோஇலனே; பானாள்
ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னைத் . . . . [05]

தாது சேர் நிகர்மலர் கொய்யும்
ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே?
- சேந்தன் கீரனார்.

பொருளுரை:

தோழி! பெரிய கடலினது புலால் நாற்றம் வீசும் அகன்ற துறையின் கண்ணே பாகன் தடுக்கவும் நில்லாமற் சென்ற கல்லென ஆரவாரம் செய்யும் விரைந்த தலைவனது தேரை யான் கண்டேனோ இல்லையோ நடு இரவின் கண் உயர்ச்சியையுடைய வெள்ளிய மணலினிடத்துத் தாழ்ந்து வளர்ந்த புன்னை மரத்தினது மகரந்தம் சேர்ந்த ஒளியையுடைய மலர்களைப் பறிக்கும் மகளிர் கூட்டமெல்லாம் ஒருங்கே கண்டது; இங்ஙனமாக எவ்வாறு பழிமொழி ஒழிவனவாகும்.

முடிபு:

தோழி, தேர் யான் கண்டனனோ இலனோ, ஆயமெல்லாம் கண்டன்று; அலர் யாங்கு ஒழிவ?

கருத்து:

தலைவன் வந்து செல்வதை யாவரும் அறிந்து பழிமொழி கூறுகின்றனர்.