குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 241

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழியை நோக்கி, "யான் ஆற்றுவதற்கு எண்ணியும் என் கண்கள் தாமே அழுதன; என் அவசநிலைக்கு யாது செய்வேன்!" என்று தலைவி கூறியது.

யாம் எம் காமம் தாங்கவும், தாம் தம்
கெழுதகைமையின் அழுதன - தோழி!
கன்று ஆற்றுப்படுத்த புன் தலைச் சிறாஅர்
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி,
ஏறாது இட்ட ஏமப் பூசல் . . . . [05]

விண் தோய் விடரகத்து இயம்பும்
குன்ற நாடற் கண்ட என் கண்ணே.
- கபிலர்.

பொருளுரை:

தோழி! நாம் காம நோயைப் பொறுத்து ஆற்றி இருப்பவும் கன்றுகளை வழியிலே செலுத்திய புல்லியதலையை உடைய சிறுவர்கள் மன்றத்தின்கண் உள்ள வேங்கை மரம் மலரும் செவ்வியைப் பார்த்து அம் மரத்தின் மேல் ஏறாமல் செய்த இன்பத்தைத் தரும் ஆரவாரம் வானத்தை அளாவிய மலை முழையின்கண் எதிரொலி உண்டாக்கும் குன்றங்களை உடைய நாட்டிற்குத் தலைவனை கண்ட எம் கண்களாகிய தாம் தமக்கு எம்பாலுள்ள உரிமையினால் தலைவர் பிரிந்தமைகருதி அழுதன.

முடிபு:

தோழி, யாமே காமம் தாங்கவும் கண்தாம் கெழுதகைமையின் அழுதன.

கருத்து:

யான் ஆற்ற எண்ணியும் ஆற்றாமை மீதூர்கின்றது.