குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 162

முல்லை - தலைவன் கூற்று


முல்லை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தலைவியைப் பிரிந்த தலைமகன் தான் மேற்கொண்ட செயல் முடித்து மீளும்பொழுது வழியில் அரும்பியிருந்த முல்லையைப் பார்த்து, ‘நீ தனித்திருப்போரை நோக்கி அரும்பால் எள்ளி நகையாடல் தகுமோ?” என்று கூறியது.

கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப்
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை
முல்லை! வாழியோ, முல்லை! - நீ நின்
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை;
நகுவை போலக் காட்டல் . . . . [05]

தகுமோ, மற்று - இது தமியோர்மாட்டே?
- கருவூர்ப் பவுத்திரனார்.

பொருளுரை:

முல்லையே நீ வாழ் வாயாக. முல்லையே மேகத்தாற் பாதுகாக்கப் பெற்ற நீரையுடைய அகன்ற முல்லை நிலத்தின்கண் பலர் தம் இல்லத்திற் புகும் ஒளியிழந்த மாலைக் காலத்தில் நீ நினது சிறிய வெள்ளிய அரும்புகளினால் புன்னகை கொண்டாய்; தலைவியரைப் பிரிந்த தனிமையை யுடையோர்பால் எள்ளி நகைப்பாய் போலக் காட்டுதலாகிய இது நினக்குத் தகுமோ?

முடிபு:

முல்லை, வாழி! முல்லை, புலத்து மாலையில் நீ முகையின் முறுவல் கொண்டனை; தமியோர் மாட்டு நகுவை போலக் காட்டல் தகுமோ?

கருத்து:

நான் தலைவியைப் பிரிந்தமையை இகழ்ந்து என்னைச் சிரிப்பதுபோல் இம்முல்லைக் கொடிகள் பூத்தன.