குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 316

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

வரைவிடை வேறுபட்ட தன்னை வினவிய தோழிக்கு, "தலைவன் இன்னும் வந்திலன்; என் துன்பத்தை அன்னையறியின் உயிர் நீப்பேன். அங்ஙனம் அறிவாளோவென அஞ்சி வேறுபட்டேன்" என்பது படத்தலைவி கூறியது.

ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும்,
நோய் மலி வருத்தம் அன்னை அறியின்,
உளெனோ வாழி - தோழி! - விளியாது,
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட, . . . . [05]

ஆய்ந்த அலவன் துன்புறு துணைபரி
ஓங்குவரல் விரிதிரை களையும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே?
- தும்பிசேர் கீரனார்.

பொருளுரை:

தோழி! இடைவிடாமல் வலிய கடலால் மோதப்பட்ட மணல் கலந்த நீர் அடைந்த கரையில் ஓரை என்னும் விளையாட்டை ஆடும் மகளிர் ஒரு தன்மையாக அதை விரட்ட, அவர்களிடம் அகப்பட்டுக் கொண்ட நண்டு ஒன்று வருத்தம் மிகுந்து விரைந்து ஓடியது. உயர்ந்து வருகின்ற அகன்ற அலை அதைக் கடலுக்குள் அடித்துச் சென்று அந்நண்டின் துன்பத்தை நீக்குகின்றது. அத்துறையையுடைய நம் தலைவனின் சொற்களோ வேறுபட்டன. என் அழகிய வளையல்கள் நெகிழ்ந்தன. அயர்வினை உடலில் நிலைக்கச் செய்யும் துன்பம் மிக்க என்னுடைய பிரிவு நோயை அன்னை அறிவாளாயின் நான் உயிருடன் இருப்பேனா?

முடிபு:

தோழி, துறைவன் சொல் பிற ஆயின; வருத்தம் அன்னை அறியின் உளெனோ?.

கருத்து:

தலைவன் வாராமையால் துன்புற்ற என் நிலையைத் தாய்அறியின் யான் உயிர் நீப்பேன்.

குறிப்பு:

துனை - கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19). உளெனோ - ஓ எதிர்மறைப் பொருளில் வந்தது, ஆயினவே - ஏகாரம் அசைநிலை. பொ. வே. சோமசுந்தரனார் உரை - ஓரை மகளிர் நண்டினை அலைக்க அது துன்புற்று ஓடுங்கால் கடல் அலை பெருகி அதனை எடுத்து அதன் செலவு தவிர்த்து உய்ய கொண்டாற்போல, ஈண்டு யாயின் கொடுமையை அஞ்சுவேனைத் தலைவன் விரைவில் வந்து வரைந்து உய்யக் கொள்ளினன் அல்லால் எனக்கு உய்தி இல்லை என்பது குறிப்பு.

சொற்பொருள்:

ஆய் வளை ஞெகிழவும் - அழகிய வளையல்கள் நெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும் - அயர்வினை உடலில் நிலைக்கச் செய்யும், நோய் மலி வருத்தம் அன்னை அறியின் - துன்பம் மிக்க என்னுடைய பிரிவு நோயை அன்னை அறிவாளாயின், உளெனோ - உயிருடன் இருப்பேனா, வாழி - அசைநிலை, நீடு வாழ்வாயாக, தோழி - தோழி, விளியாது - கெடாது, இடைவிடாமல், உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை - வலிய கடலால் மோதப்பட்ட மணல் கலந்த நீர் அடைந்த கரை, ஓரை மகளிர் - விளையாட்டு மகளிர், ஓராங்கு ஆட்ட - ஒரு தன்மையாக விரட்ட, வாய்ந்த அலவன் துன்புறு துனை பரி - பொருந்திய நண்டின் வருத்தம் மிகுந்த விரைந்த செலவு, ஓங்குவரல் விரி திரை களையும் - உயர்ந்து வருகின்ற அகன்ற அலை ஒன்று அந்நண்டின் துன்பத்தை நீக்குகின்ற, துறைவன் சொல்லோ பிற ஆயினவே - துறையையுடைய நம் தலைவனின் சொற்களோ வேறுபட்டன