குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 304

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் ஆற்றாளெனக் கருதிக் கவன்ற தோழியை நோக்கித் தலைவி, “அன்று இனிதாயிருந்த நட்பைத் தலைவனோடு செய்தேம்; இப்போது அந்நட்பு நமக்கே பகையாய் முடிந்தது” என்று கூறியது..

கொல்வினைப் பொலிந்த கூர் வாய் எறிஉளி
முகம் பட மடுத்த முளிவெதிர் நோன் காழ்
தாங்கு அரு நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக்
கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய,
நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து . . . . [05]

வெண் தோடு இரியும் வீ ததை கானல்,
கைதைஅம் தண் புனற் சேர்ப்பனொடு
செய்தனெம்மன்ற, ஓர் பகைதரு நட்பே.
- கணக்காயர் தத்தனார்.

பொருளுரை:

தோழி! கொல்லுந் தொழிலிற் பொலிவு பெற்ற கூரிய முகத்தையுடைய எறிகின்ற உளியை தன்னுடைய முகத்தின் கண் அமையும்படி பொருத்தப் பெற்ற உலர்ந்த மூங்கிலின்வலிய காம்பை தாங்குதற்கரிய நீரையுடைய வழியின்கண் எறிந்து கைக்கொள்ளும் வேகத்தையுடைய வளைந்த மீன் படகையுடைய பரதவர் கொம்பையுடைய சுறா மீனை எறிய நெடிய கரையினிடத்தே இருந்த குறிய கால்களையுடைய அன்னப்பறவைகளின் வெள்ளிய தொகுதி கெட்டு ஓடும் மலர்கள் நெருங்கிய சோலையையும் தாழையையும் அழகிய தண்ணிய நீரையுமுடைய கடற்கரையையுடைய தலைவனோடு நிச்சயமாக பகையைத் தருகின்றதொரு நட்பைச் செய்தேம்.

முடிபு:

சேர்ப்பனொடு ஓர் பகைதரு நட்புச் செய்தனெம்.

கருத்து:

தலைவனுடைய பிரிவினால் நான் மிக்க வருத்தத்தை அடைந்தேன்.