குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 325

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்தகாலத்து ஆற்றாளென எண்ணிக் கவலையுற்ற தோழியை நோக்கி, "அவர் செல்லாரென நினைந்து போவீராக வெனச்சொன்னேன். இப்போது அவர் யாண்டுள்ளாரோ!" என்று தலைவி வருந்திக் கூறியது.

"சேறும் சேறும்" என்றலின், பண்டைத் தம்
மாயச் செலவாச் செத்து, "மருங்கு அற்று
மன்னிக் கழிக" என்றேனே; அன்னோ!
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
கருங்கால் வெண் குருகு மேயும் . . . . [05]

பெருங் குளம் ஆயிற்று, என் இடைமுலை நிறைந்தே.
- நன்னாகையார்.

பொருளுரை:

“நான் செல்லுவேன் நான் செல்லுவேன்” என்று பலமுறை தலைவன் கூறியதால், முன்பு சொன்னதாகிய பொய் என்று நினைத்து, “என்னிடமிருந்து நீங்கி நிலைபெற்று செல்வாயாக என்றேனே”! ஐயோ! நமக்குப் பற்றுக்கோடாகிய தலைவன் எங்கு இருக்கின்றானோ? என்னுடைய முலைகளின் இடையில் உள்ள இடம், அவனது பிரிவால் அழுத என் கண்ணீரால் நிறைந்து, கரிய காலையுடைய நாரைகள் உண்ணும் பெரிய குளமாக ஆயிற்று.

முடிபு:

என்றலின், செத்து, கழிக என்றேன்; எந்தை யாண்டுளன் கொல்லோ! என் இடைமுலை குளமாயிற்று.

கருத்து:

தலைவன் பிரிவை யான் ஆற்றேனாயினேன்.

குறிப்பு:

நற்றிணை 229 - சேறும் சேறும் என்றலின் பல புலந்து சென்மின் என்றல் யான் அஞ்சுவலே. இடை முலை (6) - உ. வே. சாமிநாதையர் உரை - முலை இடை என்றது இடை முலையென மாறி நின்றது. ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன் கொல்லோ - குறுந்தொகை 176-5, 325-4, புறநானூறு 235, 307.

சொற்பொருள்:

சேறும், சேறும் என்றலின் - செல்லுவேன் செல்லுவேன் என்று பலமுறை கூறியதால், பண்டைத் தன் மாயச் செலவாச் செத்து - முன்பு சொன்னதாகிய பொய் என்று நினைத்து, மருங்கு அற்று - என்னிடமிருந்து நீங்கி, என் கண்ணோட்டத்தினின்று நீங்கி, மன்னிக் கழிக என்றேனே - நிலைபெற்று செல்வாயாக என்றேனே, அன்னோ - ஐயோ, ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன் கொல்லோ - நமக்குப் பற்றுக்கோடாகிய தலைவன் எங்கு இருக்கின்றானோ, கருங்கால் வெண்குருகு மேயும் பெருங்குளம் ஆயிற்று - கரிய காலையுடைய நாரைகள் உண்ணும் பெரிய குளமாக ஆயிற்று, என் இடை முலை - என்னுடைய முலைகளின் இடையில் உள்ள இடம், நிறைந்தே - கண்ணீர் நிறைந்து